பவள சங்கரி

bha

லட்சியமே சுவாசமாகimages (3)
கொண்ட
கொள்கையே வேதமாக
விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு

பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில்
சம்மனமிட்டு
வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு
பித்தம் கொள்ளச்செய்யும் புத்தனவன்!

நதி வெள்ளப் பிரவாகத்தின்
மதிவெல்ல
மாதவம் மனதிலேகி விதிவெள்ளம்images (5)
சூரையாடும் சூதைவென்ற சித்தனவன்!

காக்கை குருவி எங்கள் சாதியென
இனமறியா
இன்பவூற்றை இயல்பாய்ச்சொல்லி
களியாட்டம் போடச்செய்த ஞானியவன்!

மனிதநேயமெனும் தூரிகையால்
வண்ணங்கொண்டு
வானளாவத் தீட்டியவவைகள்
தீதின்றி திண்ணமாய் இன்றும்

உச்சிமீது வானிடிந்து வீழந்தபோதும்
அச்சமின்றி
துச்சமென சுடரையேந்தி வலிமையை
ஏழ்மையிலும் ஒளிரச்செய்த மாவீரன்!

அமரப்பொழுதிலும் அரியணையைத்
துறக்காதimages (4)
ஒளிக்கனலாய் மின்னும் கண்ணோடு
புவியனைத்தையும் மண்டியிடவைத்தவன்!

பரிதிக் கிரணங்களாய் பாரினை
ஒளியூட்டி
அடிமைத்தளையை சுட்டெரித்து
சோதிவடிவாய் சுடர்வோனே!!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதியும் ஓர் புத்தனே!

  1. அருமையான, உணர்ச்சிகரமான பதிவு. பவள சங்கரிக்கு வாழ்த்துகள். அவனைப் புகழ்ந்த சுத்தானந்த பாரதியார்,
    “தீரன் அறிவிற் சிறந்தவன் தீர்க்க தரிசி வரகவி” என்று பாடினார். அவனுடைய தீர்க்க தரிசனத்துக்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிந்தோம். சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்றோம். நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காத்தோம். அன்னல், அவனுடைய ஒரு தீர்க்க தரிசனம் உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் விளைவிக்கிறது. ஆம், இதே நாள், அமெரிக்காவில், பதிமூன்று ஆண்டுகளுக்கு முன், உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்தது. அச்சமின்றி எதிர்கொண்டு வென்றோம். அந்தப் பேரழிவில் 2500 உயிர்களைக் காப்பாற்றித் தன்னுயிரைத் த்யாகம் செய்த வீரன் ரெஸ்கோர்லாவை நினைவு கூர்வோம். 
    “Although 13 employees — including Rescorla — perished, more than 2,500 employees left the tower alive. That’s where the word “miracle” comes in. It’s also where the word “hero” comes in.”
    k.ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.