இலக்கியம்கவிதைகள்

வணங்குவோம் வாணியை…

-செண்பக ஜெகதீசன்

 

saraswati

 

 

 

 

 

 

 

 

வெள்ளைத் தாமரை உன்வாசம்
     வீணை செய்திடும் உன்ஓசை,
பிள்ளைத் தமிழ்முதல் பெருங்கவிதைப்
     பனுவல் பலதிலும் நிறைந்திருப்பாய்,
அள்ளி அருளது தந்திடுவாய்
     ஆய கலையெலாம் நீதருவாய்,
பள்ளித் தலமெலாம் உறைபவளே
     பணிந்தோம் வாணித் தாயவளே…!

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  மிக அழகான வரிகள்! இலையிலே முதலில் பாயசம் வைப்பார்கள். அதன் சுவையில் மயங்கிப்போய், அது மீண்டும் எப்போது விரிவாக வரும் என்று காத்திருப்போம். 

  காத்திருக்கிறேன்!

 2. Avatar

  இசையுடன் இயைந்த
  இன்தமிழ்க் கவிஞரின் வாழ்த்தை,
  இயலுடன் இசைதரும்
  வாணியின் வாழ்த்தெனக் கொள்கிறேன்..
  மிக்க நன்றி…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க