திருமதி. வசந்தா சுத்தானந்தன்


நான் சென்னிமலையில் ஒரு கல்லூரியின் தாளாளராக உள்ளேன். எங்கள் கல்லூரியிலிருந்து நான் சிற்றுந்து மூலம் எனதில்லம் நோக்கிச் செல்லும் பாதையில்  துணிமூட்டை போல் சாலையில் ஏதோ
கிடந்தது.  ஓட்டுநரிடம் அது குறித்துக் கேட்டேன்,

“அது என்ன துணி மூட்டை போல “ என்று

“மேடம்  துணி மூட்டை அல்ல அது வயதான அம்மா படுத்திருக்கிறாகள்”  !

“என்ன….வயதான அம்மாவா…. அதுவும்  நடுத் தெருவிலா………. ஏம்ப்பா நீ முதலிலேயே இதைப் பற்றிச் சொல்லி காரை நிறுத்தக் கூடாதா ?”

“ நேத்தில இருந்து அந்தம்மா அங்கதான் இருக்கு, நீங்க பார்க்கலயா ?”

“என்ன நேத்திலேருந்து இப்படி நடு  ரோட்டிலேயேவா  இருக்குது, யாருமே  இதைப்  பார்க்கவே இல்லையா ?”

எங்கள் கோ ஆர்டினேட்டரை  போனில் கூப்பிட்டேன். “நடு ரோட்டில் ஓரு மூதாட்டி படுத்துக் கிடக்கிறார்களே நீங்கள்  பார்க்கவில்லையா?”  என்று கேட்டேன்.

“இல்லிங்க மேடம்”……

“ ஆயிரக் கணக்கான மாணவர்களும் லெக்சரர்களும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்….ஒருவருமே
கவனிக்க வில்லையா?  போய்ப் பார்த்து அந்தம்மாவிற்குத் தேவையான உதவிகள் செய்யுங்கள். முதலில் சாப்பாடு கொடுத்து விட்டு கருணை இல்லத்தில் கொண்டு சேர்த்து விடுஙக்ள்” என்று கூறி விட்டு பணி மிகுதியால் அன்று அதைப் பற்றி மேலும் விசாரிக்க மறந்து விட்டேன்.

அடுத்த நாள்  பேசிய அந்த கோ ஆர்டினேட்டர்  “சில லெக்சரர்கள் பார்த்தார்களாம்,  நமக்கென்ன போச்சு என்று விட்டு விட்டார்களாம். அந்தம்மா நல்லாதானே இருக்கிறார்கள், நன்றாக நடக்கிறார்கள் . ஆனால் மன நிலை சரியில்லை போல் உள்ளது. அதனால்  கோவிலில் அந்தம்மாவைக் கொண்டு  போய் விட்டு விட்டேன், மேடம்”  என்றார்.

மேலும் அவர், “அந்தம்மா நம்ம கல்லூரிக்குள்ளேயே செத்துட்டா என்ன பண்ணறதுன்னு தான் நீங்க கோயில்ல கொண்டு போய் விடச் சொன்னீர்களா” என்று கேட்டார்.  திகைத்தேன் நான்.

“அடக் கடவுளே…..நான் கருணை இல்லத்திலல்லவா கொண்டு விடச் சொன்னேன். கோவிலில் ஏன் கொண்டு போய் விட்டீர்கள். உடனே போய் பார்த்து அழைத்துச் சென்று கருணை இல்லத்தில் விட்டு வாருங்கள்.”  என்று அனுப்பினேன். ஆனால் அந்த மூதாட்டியை அங்கு காணவில்லை என்று திரும்பி வந்து சொன்ன போது மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அந்த மூதாட்டி இன்று எங்கே எப்படி இருக்கிறாரோ தெரியவில்லையே என என்  மனம் அடிக்கடி நினைத்து சங்கடப் படுத்துகிறது.

 

படத்திற்கு நன்றி.

3 thoughts on “மறைந்த மனிதாபிமானம்

  1. திருமதி. வசந்தா சுத்தானந்தன்: உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஒரு மாற்றுத்திறனாளிப்பையன். அநாதை. படிக்கப்போறான். அங்கு சுட,சுட, கேண்டீன் சாப்பாடு. ஆனால், காசில்லாத கபோதியா. அனாதை இல்லத்து ஊசிப்போன கட்டுச்சாதம். அதை பார்த்து துடிதுடித்ததும் ஒரு வசந்தா. ஒரு மாச சாப்பாட்டுக்கு பணம் கட்டி, அவன் சாப்பிடுவதை பார்த்து, இவள் அனுபவித்தாள்.

  2. This story appears to be very touching one. No doubt this kind of events exhibits our peoples mentality nowadays.

  3. இக்கதை மிகவும் மனதைத் தொடும் வகையில் உள்ளது. மனிதனின் இன்றைய மனநிலை எப்படி உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க