பவள சங்கரி
இனிமையான 2014ம் ஆண்டை வாழ்த்தி விடைகொடுத்து வளமான 2015ம் ஆண்டை வேண்டி வரவேற்போம்!
‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு – சொல்லடி சிவசக்தி’ என்ற மகாகவி பாரதியின் உள்ளார்ந்த வேண்டுதலுக்கு ஏற்ப தங்களுடைய வல்லமைகள் மூலமாக நம் ‘வல்லமை’ இதழை அடுத்த உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ள அனைத்து நல்லிதயங்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த பாராட்டுகள். வெற்றிகரமான பல படைப்பாளர்களை உருவாக்கும் விதமாக நம் வல்லமை இதழில், கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட புத்தக மதிப்புரை போட்டி – http://www.vallamai.com/?p=41898 , திருமதி தேமொழி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, ‘கடித இலக்கியப் போட்டி’ – http://www.vallamai.com/?p=44563 மற்றும் கவிஞர் திரு காவிரி மைந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ – http://www.vallamai.com/?p=47553 என்ற கட்டுரைப்போட்டியும், இப்போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்து அற்புதமாகத் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ள, தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன், பதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் மற்றும் மாபெரும் பேச்சாளரும், கவிஞருமான, முனைவர் வ.வே.சுப்பிரமணியன் (கவிஞர் வ.வே.சு.) ஆகியோரின் தன்னலமற்ற பங்களிப்பினால் தம் இலக்கியப் பணியில் நம் வல்லமை இதழ் அடுத்த உச்சத்தை எட்ட முடிந்துள்ளது. நம் வல்லமை இதழில் தொடர்ந்து தங்கள் ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், ஓவியங்கள் என்று தொடர்ந்து அற்புதமான படைப்புகளை வழங்கி நம் வாசகர்களுக்கு இனிய விருந்தை படைத்துக்கொண்டிருக்கும், திரு கோதண்டராமன், விஞ்ஞான, இலக்கிய, நாடகப் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் திரு ஜெயபாரதன், திரு. இன்னம்பூரான், திரு.இசைக்கவி ரமணன், திரு.கிரேசி மோகன், திரு. கேசவ், திரு சு.ரவி, திரு கே.ரவி, திரு. திவாகர், திருமதி விசாலம், திரு. மாதவன் இளங்கோ, திருமதி. சுபாஷிணி டிரெம்மெல், திருமதி மேகலா, திருமதி தேமொழி, திரு தமிழ்த்தேனீ, திரு செண்பக ஜெகதீசன், கவிஞர் காவிரிமைந்தன், திரு ரிஷான் ஷெரீப், திரு சத்தியமணி, திருமதி. சுபாஷிணி திருமலை, திரு சுதாகர் செல்லதுரை, திரு வினைதீர்த்தான், திரு. கோபாலன், திரு அமீர், திரு பழமைபேசி மற்றும் ஏனைய பல படைப்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
வல்லமை இதழை செவ்வனே நடத்தும் விதமாக, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தங்கள் பொன்னான நேரத்தை வழங்கி, அரும்பணியாற்றி வரும் திருமதி தேமொழி, திருமதி மேகலா மற்றும் திருமதி பர்வதவர்தினி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அனைத்திற்கும் மேலாக நம் அனைத்துப் படைப்பாளர்களையும் உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து மேலும், மேலும் சாதனை படைக்கத் தூண்டும் அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இனி வரப்போகும் நாட்களிலும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடியிருக்கிறோம். நம் வல்லமையின் வழங்கி நிர்வாகி, திரு. ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ், தள மேலாளர், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் , திரு. காமேஷ், திரு. செல்வ முரளி, ஆலோசகர்கள், திரு. இன்னம்பூரான், திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன், திரு. விஜய திருவேங்கடம் மற்றும் திரு. விசாகப்பட்டினம் வெ. திவாகர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.


Leave a Reply