வந்தது போகி!
-விசாலம்
வந்ததுப் போகிப் பண்டிகை ,
சூழ்ந்துக் கொண்டது ஒரேப் புகை
வீட்டின் குப்பைகள் வெளியே வர,
வெளிக் குப்பைகள் அதனுடன் சேர
தெருவுக்குத் தெருஅதுவும் எரிய,
சுற்றுச் சூழ்நிலை வெகுவாய்க் கரிய,
அளவிலா மாசில் மூச்சும் அடைக்க,
இது தேவையா என்று மனமும் கேட்க
யார் சொல்லுவார் பதில் ?
இந்தச் சமூகத்தில் .
உன் மனதில் குப்பை நிறைந்துள்ளதே
அதில் அழுக்கும் சேர்ந்துள்ளதே
கெட்ட எண்ணங்கள் சுழலுதே
அன்பும் வாய்மையும் போனதே
அதை முதலில் எரியப்பா,
மனதைப் புனிதம் ஆக்கப்பா ,
அதுதான் போகித் திருநாளாம்
அன்பு நிறைந்த மன நாளாம்!