-செண்பக ஜெகதீசன்
கண்ணுடைக் கரும்பை நட்டுவைத்தே 
கதிரவன் காணப் பொங்கலிட்டு,
பெண்ணொடு ஆணும் குரவையிட்டுப்
பகலவன் அருளப் படைத்திடுவோம்,
வண்ண மஞ்சள் இஞ்சியுடன்
உறவும் நட்பும் சேர்ந்திடுவோம்,
மண்ணில் உழவரை வாழ்த்தியேதான்
மகிழ்வோம் பொங்கல் நாளினிலே…!

Leave a Reply