பெண்ணே நீதான்!
-ரா.பார்த்தசாரதி
ஒரு உயிரைப் படைத்த கடவுளும் நீதான்
பாலூட்டி, சீராட்டி வளர்த்தவளும் நீதான்
என்னோடு விளையாடி அன்புகாட்டியவளும் நீதான்
திருமணப் பந்தலில் கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்
நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால் ஆலோசனை கூறுபவளும் நீதான்
நான் மூப்பு அடைந்தால் என்னை மடியில் சுமப்பவளும் நீதான்
மானிட சக்தியின் மறு அவதாரமாய்ப் பராசக்தியாய் இருப்பவளும் நீதான்
குடும்பத்தில் மந்திரி தாய் மனைவி ஆகிய பல பதவிகளும் நீதான்
குடும்பத்தின் பல்கலைக்கழகமாய்த் திகழ்பவளும் நீதான்
பாரதிகண்ட புதுமைப்பெண்ணும் நீதான்!