இலக்கியம்கவிதைகள்

மணி ஓசை!

எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

மணி ஓசை கேட்டவுடன்
மனமெல்லாம் மகிழ்கிறது
துணி வெல்லாம் பிறக்கிறது
தூயநிலை வருகிறது!

மால்மருகன் கோவில் மணி                              temple bell
மருந்தாக இருக்கிறது
தோல்வி எலாம் தொலைகிறது
துவண்டநிலை போகிறது!

வேலவனின் கோவில் மணி
வினையெல்லாம் போக்(கு)கிறது
நால்வேதப் பொருளை எல்லாம்
நயமாகத் தருகிறது!

சிவனாரின் கோவில் மணி
சீர்திருத்த முயல்கிறது
அவமானச் செயல் எல்லாம்
அதுபோக்க முயல்கிறது!

மாதாவின் கோவில் மணி
மனங்குளிர வைக்கிறது
ஆதாரம் தான் எனவே
அதுஒலித்து நிற்கிறது!

விகாரையின் கோவில் மணி
விண்ணென்று ஒலிக்கிறது
வீண் வார்த்தை பேசுவதை
விட்டுவிடு என்கிறது!

கோவில்மணி ஓசை கேட்டால்
குணமெல்லாம் மாறுமையா
குவலயத்தில் நாம் வாழ
கோவில்மணி உதவும் ஐயா!

ஆதலினால் கோவில் தன்னை
அனைவருமே நாடிநிற்போம்
ஆண்டவனின் அருள் பார்வை
அனைவருக்கும் கிட்டும் ஐயா!

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  மங்கலமாய் பலர் காதில் தினம் ஒலிக்கும் மந்திரம்!
  ஆண்டவனின் சன்னதியில் நாம் கேட்கும் ஒலிநயம்!
  புண்ணியங்கள் வேண்டுமென்பார் புனித ஒலிகேட்பதற்கு!
  பாவங்களும் அகலுதென்பார் அந்த ஒலி கேட்கும்போது!
   
  தேவன்கோவில் ஓசையது செப்பும் மொழி அற்புதமே!
  நல்லவை எல்லாம் நாளும் நானிலம் பெறுகவே!
  வாழ்வினில் எதிர்நோக்கும் வளங்களும் வருகவே!!
  இன்பமாய் மனதில் நிலைக்கும் அமைதியும் பெறுகவே!!

  இயக்குனர் பி.மாதவன் அவர்கள் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராய் பலகாலம் பணிபுரிந்தவர்.  முதன் முதலாய் தானே இயக்கம் செய்து ஒரு படம் செய்ய இருப்பதை முன்னிட்டு கவியரசர்கண்ணதாசன்அவர்களைஅழைத்து இப்படத்திற்கு பாடல் எழுத பணித்தபோது .. முழுக்கதையையும் கேட்டுவிட்டு கவிஞர் எழுதித்தந்த பாடல்.. தேவன் கோவில் மணி ஓசை.. நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை.. பாவிகள்மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணியோசை .. இந்த வரி எனக்கு கவியரசின் உயரத்தை விஸ்வரூபமாய் காட்டியது. திரைப்படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கண்ணதாசனைக் கேட்டபோது அவர் இட்டபெயரும் “மணி ஓசை” தானே!! 

  உம்தமிழ் ஓசையதிலே உயிர்நலம் கூடவுண்டு..
  உலகத்தின் முழுமைக்கும் உச்சரிக்கும் வார்த்தையுண்டு!
  நல்லவை யாவுமே நமக்கென கொள்ள வேண்டி
  நாளுமே கவிதையாக்கும் நற்றமிழ் தூரிகை நீயோ!
   
  வாழ்த்துகளுடன்..
  காவிரிமைந்தன்
   

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க