ருத்ரா

26mplead2_jpg_370166g
மனித சித்திரங்களை
கார்ட்டூன்கள் ஆக்கினார்.
கதைகளும் நாவல்களும்
இவர் கோடுகளிலும் சுழிகளிலும் வந்து
முற்றுப்பெற்றன.
எத்தனை முகங்கள்?
அவை காட்டும் அகங்கள்
அத்தனையும்
இந்த பென்சில் பிரம்மா
படைத்தது.
எழுத்துக்களை அவர்கள் தந்தார்கள்
துடிப்புகளை
இவர் தூரிகை தந்தது.
தேவன்
லெட்சுமி
தி.ஜானகிராமன்
ஜெக சிற்பியன்
ஜெயகாந்தன்
இவையெல்லாம்
புகழ்பெற்ற பேனாக்கள்.
பத்திரிகை பக்கங்களில்
இவர் கோடுகளில்
அவை பரிணாம‌ம் கொண்டன‌
பிரமிக்க வைத்த படைப்புகளாய்.
அவர் கார்ட்டூன்களில்
நாப்பதுகள் அம்பதுகள் அறுபதுகள்
என்று
வருடங்களின்
அரசியல் வர்ணங்களும்
சரித்திர காரணங்களும்
அங்குலம் அங்குலமாய்
அசை போட்டுக்காட்டின.
அவர் பென்சில் கீற்றுகளிலும்
சமுதாய நாற்றுகள் காற்று வீசின.
ஆனந்த விகடனின் முத்திரைகளில்
ஜெயகாந்தன் இருந்தாலும்
அவற்றின் முகத்திரைகளில்
கோபுலுவே கொலுவிருந்தார்.
இருவருக்கும்
இப்போது விழுந்தது திரை மட்டுமே.
எழுத்தும் கோடும்
வெறும் உடல் அல்ல‌
பொசுங்குவதற்கு.

=================================================

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க