காற்றில் மிதக்கும் சிறகு!
-புலமி
பூவிற்குள் மொட்டாய்ப்
பூக்கும் வரமாய்
உனக்குள்ளே காதலாய்க்
காத்திருக்கின்றேன்
மேகத்துள் மழையாய்
உருகும் நினைவாய்
அருகாமையற்ற உறவாய்
தேடித் தீர்கின்றேன்
தென்றலுக்குள் இதமாய்
உள்ளத்தில் கனவாய்
உரிமையற்ற உணர்வாய்
விழிகளில் துளிகளானாய்
இரவிற்குப் பகலாய்
நாளுக்கொரு நகர்தலாய்த்
திசைகளாய்ப் பிரிந்திருக்கும்
வாழ்வின்
ஒற்றைப் பயணம்
எப்போதோ ?