-ராதா மரியரத்தினம்

துள்ளித் திரியும் வயது
கள்ளம் இல்லாப் பருவம்
யாருக்கும் பயம் இல்லை
மொட்டுவிரிந்து இதழ்
மெல்ல அவிழ்க்கும்
இள மலர் போல​
முகை அவிழும் வயதில்
கள்ளம் குடிகொள்ளக்​
கதவோரம் நின்று விடும் கால்கள்
எங்கிருந்து வந்தது இந்த வெட்கம்?

ஓர​ விழிப் பார்வையும்
ஒதுங்கியே போவதும்
தூர​ நின்று பார்ப்பதும்
பதின்ம​ வயதில் குடியேறும் நாணமும்
ஏதுமறியாப் பருவம்
இது பல​ ஓநாய்களுக்கு
இரையாகும்  பதமான பருவம்!

கறுப்பு வெள்ளைக் காட்சியது
வர்ணக் கனவாக மாறும் வயது
மெல்ல அரும்பும் ஒரு காதல்
அது புரியாத​ வயதில்
அரும்பிடும் முதல் பாசம்
அரைகுறையாய் இருந்த​ நிலவு
முழுமதியாகும் அழகிய பருவம்
செதுக்கி முடித்த சிற்பம்
செம்மைப் படுத்தும்
ஓர் அழகிய​ வடிவம்!

குழந்தை முகம் மாறி
ஒரு குமரியின் முகமது
அரும்பிடும் நேரமது
கதவின் ஓரத்தில்
பூக்கின்ற​ விடிவெள்ளி
மூடிய​ கைகளுக்குள்
புதைந்திட்ட​ பொக்கிசம்
முழங்காலில் முகம் புதைந்திட்ட​
புத்தம் புது ஓவியம்
தென்னையின் பின்னால்
ஒளிர்ந்திட்ட​ தேவதை
பதின்ம வயது ஒரு பொற்காலம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "பதின்ம வயது !"

  1. என் முகம் அறியாவிட்டாலும் என் கவிதையைப் பிரசுரித்த​ நிர்வாகக் குழுவிற்கு என் மனமார்ந்த​ நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.