கவிஞர் காவிரிமைந்தன்.

kalayana valaiyosai
கல்யாண வளையோசை கொண்டு … ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் ஒரு காதல் பாடல்.

கிராமத்துக் கதையென்பதால் இயற்கையின்
எழிலெல்லாம் ஆங்காங்கே பாய் விரிக்கும்!
வயல்களுடன் வரப்புகளும்
வகிடெடுத்து வைத்தது போலிருக்கும்!

பச்சை ஆடை கட்டிய பருவப் பெண்ணைப்போல
பார்க்குமிடமெல்லாம் பசுமை நிறைந்திருக்கும்!
வீசும் தென்றலுமே அங்கே விளையாட வந்திருக்கும்!
விழி பேசும் காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்!
மொழி பேச நினைத்தாலோ காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்!

வாலியின் பாட்டு நினைவுக்குள் வந்து நிற்கும்!
இசையோடு இணைந்து வந்து டி.எம்.சௌந்தரராஜன்
மற்றும் பி.சுசீலா குரல்கள் நம்மை வசப்படுத்தும்!
திருமணம் என்பது நிச்சயிக்கப்பட்ட வேளை
இரு மனங்களிலும் இன்பநதி ஓடும்!
இளமை சுகம் தேடும்! இனிமை நிறைந்தாடும்!

இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘உரிமைக்குரல்’ தந்து உள்ளம் தொடும் பாடல்! கிராமத்து மண்வாசனையோடு வயல்களிலே விளைந்திருக்கும் நெற்கதிர்கள் தலைசாய்த்தது கூட இந்தக் காதலர்கள் செய்கை பார்த்துதானோ? வாலி எண்ணத்தில் உழவு செய்து இன்பப்பயிர் விளைவித்திருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் நடிகை லதாவும் இணைசேர்ந்து நடிக்க மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ஆபரணம் பூட்ட, இதோ கல்யாணன் வளையோசை கேட்கிறது!

 

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

மாமன் என் மாமன்
மாமன் என் மாமன்
கஞ்சி வரக் காத்திருக்க
கண்ணிரண்டும் பூத்திருக்க
வஞ்சி வரும் சேதி சொல்லு
வந்த பின்னால் மீதி சொல்லு

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய் வழிய
கண்ணோடு மை வழிய
அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ
ஆசை இருக்காதோ

கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இங்கு
வந்தாளே இள வாழம் தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு

ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
ஆஆ இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
நெஞ்சு நெகிழ்ந்திருக்க
ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
பொன்னான நெல் மணிகள்
கண்ணே உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல்
தாவிச் சிரிக்காதோதாவிச் சிரிக்காதோ

கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இன்று
வந்தாளே இள வாழம் தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு

காணொளி: https://www.youtube.com/watch?v=soJrnRKr6-4

https://www.youtube.com/watch?v=soJrnRKr6-4

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *