செய்திகள்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ‘திணை இசை’ – செய்திகள்

’திணை இசை’ மாலை
வழங்குபவர் : பேராசிரியர். திரு. நிர்மல் செல்வமணி

நாள் : 29 ஜுலை 2011

நேரம் : மாலை 5:00 மணி

இடம் :  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3ம் குறுக்குத் தெரு, மத்திய பாலிடெக்னிக் வளாகம், தரமணி, சென்னை – 600 113

தொலைபேசி : 2254 2551 / 2254 2552

பண்டய தமிழ் இசை செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை மற்றும் மேற்செம்பாலை ஆகிய ஏழு வகைகளை அடிப்படையாகக் கொண்டது.  இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன.  இச் சிறப்பு நிகழ்ச்சியில் பேராசிரியர் திரு. நிர்மல் செல்வமணி, மேற்கத்திய நரம்புக் கருவியான ‘கிட்டார்’ கருவியைக் கொண்டு தமிழ் பண்களை இசைக்கிறார்.  இந்நிகழ்ச்சி பழைய கலைகளை மறு உருவாக்கம் செய்யும் நிகழ்ச்சியாக இல்லாமல் அதில் புதுமைகளையும் இவர் புகுத்த உள்ளார்.

பேராசிரியர் திரு. நிர்மல் செல்வமணி பற்றி :
அன்மைக் காலம் வரை இவர் சென்னை கிறித்துவர் கல்லூரியில், ஆங்கிலத் துறையில் பணியாற்றினார்.  தமிழ் இசை பற்றிய ஆய்வு (Tamil Musicology), தமிழ் கவிதை கொள்கைகள் பற்றிய ஆய்வு (Tamil Poetics), தமிழ் யாப்பிலக்கணம் (Prosody)ஆகிய பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்தியவர் இவரே.
சுற்றுச் சூழல் சார்ந்த தமிழ் இலக்கிய ஆய்வு (Ecocriticism) என்ற துறையினை சென்னை கிறிஸ்தவர் கல்லூரி மூலம் உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தினார்.  தற்போது இவர் திருவாரூர் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர். டி. ஜெயராமன் அவர்களுடன் இணைந்து ஆங்கிலத் துறையை ஆரம்பித்து அதன் துறைத் தலைவராகவும் உள்ளார்.  இவர் அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மாகாணப் பல்கலைகழகத்தில் கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க