தமிழா தமிழில் பேசு!

-துஷ்யந்தி

எதையடா இழந்துவிட்டாய்
இன்பத் தமிழை மறப்பதற்கு?
நவீனத்துடன் ஓடுகின்றாய்
நாயாய்ப் பேயாய் அலைகின்றாய்!

உறக்கத்தைத் தொலைத்தாய்
உறவுகளையும் தொலைத்தாய்
அந்நியன் ஆக்கித்தந்த
ஆங்கிலத்தைப் பேசுகின்றாய்!

அரைகுறையாய் ஆடைகளையும்
மாற்றித்தான் பார்க்கின்றாய்
சர்வதேசம் என்ற பேரில்
சாக்கடை நோக்கிப் பயணம்!

“அம்மா” என்ற அழகிய தமிழை
“மம்மி” என்று மரணக் கல்லறை
ஆக்கிவிட்டாய்!
தமிழின் இனிமையைக் கொச்சை
படுத்திக் காட்டுகின்றாய்!

போதும் அறியாமையை நிறுத்திடு
அமுதத் தமிழை உணர்ந்திடு
சர்வதேச மொழி – அது உலகின்
சவால்களை எதிர்கொள்ள மட்டுமே!

தாய் தந்த மொழி – அது தரணியில்
பிறவி முடியும்வரை
எமது தனித்துவத்தை எதற்காகவும்
விற்காதீர் வீரத் தமிழினத் தோழர்களே!!

 

1 thought on “தமிழா தமிழில் பேசு!

 1. அழகிய தமிழ் சொல்லெடுத்து
  தமிழர் மீது பாய்ச்சலா? – அதற்கு
  இடம் கொடுத்தது யார் தமிழா? என்று
  எனது தளத்திலும் 
  தங்கள் கவிதையைப் பகிர்ந்துள்ளேன்!
  இணைப்பு: http://wp.me/pTOfc-cK

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க