‘சிரிப்பு டாக்டர்’
கிரேசி மோகன்
கோவை சூரியன் எப்ஃஎம் மற்றும் கே.ஜி மருத்துவமனையும் இணைந்து நிகழ்த்திய விழாவில் அடியேனுக்கு “சிரிப்பு டாக்டர்’’ என்ற பட்டத்தை புரூக்பீஃல்ட் வர்த்தக வளாகத்தில் கே.ஜி மருத்துவமனை தலைவர், டாக்டர் பத்மஸ்ரீ ஜி.பக்தவச்சலம் அவர்கள் வழங்கினார்கள்…
இது ஒரு Hyper Tension Awareness Initiative….
டாக்டர் பேசும்போது BP குறைய உப்பைத் தவிருங்கள் என்றார்….அடியேன் பேசும்போது ‘’உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றேன்….நான் சொன்ன உப்பு சிரி-உப்பு சிரிப்பு….’’உப்பில்லா பண்டம் குப்பையிலே….உப்புள்ள பண்டம் தொப்பையிலே’’….’’காலை எழுந்தவுடன் வாக்கிங்….பின்பு கனிவு கொடுக்கும் நல்ல டாக்கிங்….மாலை முழுவதும் டிராமா….என்று வழக்கப் படுத்திக் கொள்ளு மாமா’’….’’யோக்யமாய்’’ இருத்தலே ‘’ஆரோக்யம்’’….இப்படியாகச் சென்றது அடியேன் பேச்சு….