பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

2

— கவிஞர் காவிரிமைந்தன்.  

 

பாடுவோர் பாடினால்3பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

இம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்தில்! அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் பூத்த பாடல்கள் என்றும் வாடதவை. நம்மை முணுமுணுக்க வைப்பவை. எம்.ஜி.ஆர். என்னும் கதாநாயகனுக்காக அவர் இசைத்த கானங்கள் காலங்களைத் தாண்டி வாழுபவை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.

அவர் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்…

இன்று அவர் நம்மிடம் இல்லை. அவர் அமைத்த இசை, அவர் கொடுத்த பாடல்கள், தமிழ் உலகம் உள்ளவரை உயிரோடு உலவி வரும். இதோ இந்தப் பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றியது. கண்ணன் என் காதலன் திரைப்படத்திற்காக வரைந்த இசையோவியம். செந்தமிழ் சீர் கொண்டு கவிஞர் தர, மெல்லிசை இசையாலே எம்.எஸ்.வி. உயிர் கொடுக்க, அற்புதக் குரலாலே நம்மை வயப்படுத்தும் டி.எம்.சௌந்தரராஜன்.

பாடுவோர் பாடினால்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்… கதையின்படி நடக்க முடியாத நாயகி, இந்த இசை கேட்டு, கால்கள் குணம்பெற்று ஆடத் தொடங்குகிறாள். ஏற்ற பல்லவி இசையை சுமந்து வர, எம்.ஜி.ஆர். அவர்களின் முக பாவங்கள் அடடா… அடடா… போட வைக்கும். நாயகியாக செல்வி ஜெயலலிதா. பாடல் வரிகளை உச்சரித்து இது மெட்டுக்கு இடப்பட்ட வரிகளா அல்லது இயற்றிய வரிகளுக்கு இடப்பட்ட மெட்டா என்று பட்டிமன்றம் வைக்கச் சொல்கிற பாடல்.

கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் என்கிற வைர வரியும் பாடலில் மின்ன…

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

நம்மையும் அறியாமல் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆடத் தோன்றுகிற ரகசியம் … இசையல்லவா?

____________________________________________________________________________
பாடல்: பாடுவோர் பாடினால்
திரைப்படம்: கண்ணன் என் காதலன் (1968)
இயற்றியவர்: கவிஞர் ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
காணொளி: https://youtu.be/qBFIb_2iChc
____________________________________________________________________________

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்… ம்…
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

____________________________________________________________________________

https://youtu.be/qBFIb_2iChc

____________________________________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

  1. தேனான இசை. அழகான கவிதையான வரிகள். இந்த இழையைப் பகிர்ந்த கவிஞர் காவிரி மைந்தனை மெச்சுக்கிறேன். நன்றி.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  2. நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
    நூறு கோடி விந்தை புரிய, மேடை வந்த தென்றல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன், கவிஞர் ஆலங்குடி சோமு பாடல் வரிகளுக்கு தெள்ளத் தெரிவான உரை எழுதிய கவிஞர் கவிஞர் காவிரி மைந்தனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *