உம் வழியில் பயணிக்கும்…….!
(முன்னாள் குடியரசுத் தலைவருக்கு இரங்கற் பா)
முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
sethuramansingaram@yhoo.com
அன்பான அருளான பண்பான
பாரதத்தின் தலைமகனே!
பிறப்பைச் சரித்திரமாக்கிய
இந்தியாவின் பிரபஞ்சமே!
எம்மில் கலந்து எம் கண்ணில் கலந்து
உள்ளில் கலந்து எம் ஊனில் கலந்து
விண்ணில் கலந்தாய் இன்று….!
மண்ணில் பிறந்தாய்!
மனிதரிலே உயர்வானாய்!
விண்ணில் விதி பறக்க
விதி உன்னை அழைத்ததுவோ…?
எண்ணத்தில் கருவானாய்!
இளைஞர்களின் எண்ணத்தில் கருவானாய்…!
ஏழையரின் ஏந்தலானாய்!
கண்களிலே நீர் வழிய
எம்மைக் கலங்கடித்து விட்டாயே!
ஏவுகணை நீ ஏவிப் பாரில்
பாரதத்தை உயர்த்திவிட்டாய்!
பாரதத்தின் தலைமகனே!
தமிழ்த்தாயின் திருமகனே!
நீர் விதைத்த எண்ணங்கள்
நிதமும் எம்மை வழி நடத்தும்
நீர்நினைத்த எண்ணங்கள்
நிச்சயம் நிறைவேறும்!
பார் புகழப் பாரதமோ – என்றும்
உம் வழியில் பயணிக்கும்…..!