பரமம்!
பவள சங்கரி
எஞ்ஞான்றும் மகிழ்ச்சி
நிலைக்கும் சூக்குமம்
சூழ்நிகழ்வுகளை நாட்டமுடன்
நயந்தொழுகும் நற்பண்பும்
வீணர்களின் வேடிக்கையை
வீசியெறியா மனப்பாங்கும்
நிலையில்லாக் கூத்தின்
நிசமறியும் வானகமும்
ஏதிலார் இன்சொலால்
தீதில்லா திட்பமும்
சூறைக்காற்றாய் சுதந்திரம்
பறிக்கும் சூலநாசமும்
அமிழ்தே பெறினும்
உள்ளொன்று வைத்து புறத்தே
பொய்யுரையை நாடாமையும்
ஔவியம் கொண்டோரை
திடமாய் ஒதுக்கியும்
உளம் புரத்தல்
கவ்வுடை பரமமே!
எஞ்ஞான்றும் மகிழ்ச்சி நிலைக்கும் சூட்சுமம் …மிகச் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள் திருமதி.பவளசங்கரி.
மனத்துக்கண் மாசு இலன்..அனைத்து அறன்…
Ok