மென்பொருள் பொறியியலில் அறிவுமாற்றத்தை ஏற்படுத்துதல்

2

நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

மென்பொருள் பொறியியலில் அறிவுமாற்றத்தை ஏற்படுத்துதல்

(Knowledge Transfer in Software Engineering)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் திருவள்ளுவர், அறத்துப்பால் (இல்லறவியல்), ஒழுக்கம் உடைமை, அதிகாரம் 14, “அறம் தவறாமலும் கடமை தவறாமலும் நடத்தல்” குறள் எண் 140ல் ”அறிவு என்றால் என்ன? “ என்பதை பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

(உயர்ந்தவரோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றவாராயினும் அறிவில்லாதவரே)1
(Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant) 2
மேலும், அறத்துப்பால் (இல்லறவியல்), ஒப்புரவு அதிகாரத்தில், அதிகாரம் 22 , “உலகத்தோடு ஒட்டி நடந்து உதவி செய்து வாழ்தல், குறள் எண் 214ல் அறிவை பற்றி விளக்கம் தருகின்றார்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

(ஒப்பரவறிந்து பிறருக்கு உதவி செய்து வாழ்பவன் உயிரோடு கூடி வாழ்பவன் ஆவான். அவ்வாறு வாழாதவன் செத்தாருள் ஒருவருனாக் கருதப்படுவான்)1
(He / she truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) , he / she who knows them not will be reckoned among the dead) 2

“அறிவை அறிவதற்கே அறிவு தேவைப்படுகிறது என்று சட்டக்கதிர் இதழில் (மார்ச் 2009) படித்த ஞாபகம். அறிஞர்களின் ஆய்வறிக்கைக்குள் அகப்படவே அறிவு மறுக்கிறது. அறிவுக்கு விளக்கம் தேடிய உளவியல் அறிஞர் எம். தெர்மன் என்பவர் 1921 ஆம் ஆண்டில் ஒரு நாள் அமெரிக்காவில் நடந்த கருகத்தரங்கில் அறிவு என்பது சிந்திப்பதற்கான திறன் என்றார். மற்றொரு உளவியல் அறிஞர் எட்வர்ட் எல். தாண்டிக் என்பவரோ கேள்விக்கு உறிய வகையில் பதலளிக்கும் திறனே அறிவு என்றார். 1996 ஆம் ஆண்டில் அறிவு பற்றி விவாதித்தவர்கள் “சுற்றியிருப்பதோடு முரண்படாமல் ஒட்டி உறவாட உதவுவதே அறிவு “ (Effective adaption of the environment) என்று முடிவெடுத்தனர். என்ன செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? எதற்காக செய்ய வேண்டும? எப்படி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதே அறிவு தான். 3

அறிவு என்பது தகவல்கள். skills (திறமை) , செய்முறை பயிற்சியானாலும் மற்றும் அனுபவத்தினாலும் , சுற்றுப்புற சூழ்நிலைகளினாலும் பெறுவது. புத்திசாலி ஆவதற்கு அறிவு தேவைப்படுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு காரியத்தை தீhமானிக்கலாம். தீர்மானம் மெய்யாகவும் (True) நிகழலாம் அல்லது தவறாகவும் (False) அமையலாம். அறிவும், தரவும் (Data) வெவ்வேறானவை. உதாரணமாக, ஆஸ்பத்திரியின் நோயாளி பற்றிய விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், வியாதியின் தன்மை, மதிப்பீடுகள், நிலவரம்) கணனியில் பதிவு செய்ததை, மருத்துவர் அறிந்து கொண்டு சிகிச்சை செய்வதாகும்.

மென்பொருள் மூலம் நிறுவப்பட்ட கருவிகள் சில சமயங்கள்ல் நூறு சதவிகதம் துல்லியமாக வேலை செய்துவிடும் என்று கூறிவிடமுடியாது. அறுவை சிகிச்சையின் போது ஒரு சிறிய உபகரணத்தினாலோ, கருவியானலோ அல்லது மென் பொருளினால் பழுது ஏற்பட்டால் நோயாளி கடுமையாக பாதிக்கபடுவார். உதராணமாக ஐரோப்பாவின் விண்வெளி நிறுவனத்தால் ஏவப்பட்ட மாதிரி ராக்கெட் (Ariean 5) மென்பொருளின் கோளாறினால் 5 பில்லியன் அமெரிக்கன் டாலாகள் நஷ்டமானது. (Therac-25 radiation therapy device) ஒரு தரம் கொடுக்க வேண்டிய தெராக் கதிர்வீச்சு, (one dose, ஒரு விழுங்கு) கதிர்வீச்சு உபகரணத்தின் மூலம் கொடுத்த பொழுது, “தெரக் 25 ரேடியேஷன் தெரபி” கருவி சரியாக செலுத்தப்படாத காரணத்தால் நோயாளி இறந்தார். எனவே. மென்பொருளில் பிழைகளை கண்டுபிடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவலாகும்.

picture

மனிதர்களிடம் மட்டும் தான் சிந்திக்கும் திறனான “அறிவு” என்ற கண்ணுக்கு புலப்படாத பொருள் இருப்பதால் தான், பற்பல புதிய கருவிகள், உபகரணங்கள், பொருள்கள் ( ராக்கெட், விமானம், கார், கப்பபல், மென்பொருள்) உருவாக்கி, அதை உபயோகித்தும் வருகின்றார்கள். உதராணமாக விஞ்ஞானி சர். ஐசக் நீயூட்டன், ஆப்பிள் மேலிருந்து கீழே விழுகிறது என்பதை ஆராய்ந்தார். பஞ்ச பூதங்களில் (நிலம் , நீர் , தீ, காற்று, ஆகாயம்) ஒன்றான பூமிற்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என நியூட்டன் விஞ்ஞான விதிகளை உருவாக்கினார்.

அறிவு மேலாண்மை பற்றி தகவல் தருவோரும், சேகரிப்பவரும், தொடர்பு படுத்துவோரும், உருவாக்கவோரும், அமுல்படுத்துவோரும் மற்றும் நன்கொடையாக வெளியிடுபவரும் உறுப்பினர்கள் ஆவார்கள்.

அறிவு கட்டமைப்பிலிந்து (Knowledge Structure) அறிவு பொருட்களை உருவாக்கலாம். அதை பகிர்ந்தளிக்கவும் செய்யலாம்.

Reference :

1. திருக்குறள் மிக மிக எளிய உரை , பேராசிரியர் முனைவர் மு.பெரி.மு இராமசாமி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன் , சென்னை, நவம்பர் 1991
2. (http://www.gokulnath.com/thirukurals/22)
3. பேராசரியர் ஆ. சந்திரசேகரன் அவர்களின்: அறிவுசார் சொத்துரிமை சட்டம்”என்ற நூலின் அணிந்துரையில் நீதியரசர் கே. ரவிராஜ பாண்டியன்)
4. Marian Pompillu, CRISTESCU, Corina loana,, Knowledge Management Archittecture – Princples and Tendencies, Revista Informarmatic Economica, nr. 4(48)/2008,pp 65-68. Marian Popmpillu, CRISTESCU, “Lucian Blaga” University of Sibiu, Romania, Corina Loana CRISTESCU, Faculty of C.S.I.E., Academy of Economic Studies, Bucharest, Romania

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மென்பொருள் பொறியியலில் அறிவுமாற்றத்தை ஏற்படுத்துதல்

 1. மனிதனின் அறிவு  அனுபவத்தைப் பொறுத்து செயல் படும்; முடிவெடுக்கும்
  கணினியின் ஆற்றல் தரவிலிருந்து செயல்படும் ; முடிவளிக்கும்
  விஞ்ஞானம்,கதிர்வீச்சு,மின்சாரம், இராசாயனம்…….   இல்லை யென்றால் செயற்கை இல்லை
  மெய்ஞானம்,அன்பு,பாசம்,நேசம்,மகிழ்ச்சி ……  இல்லை யென்றால் இயற்கையில்லை
  எத்தனை செயற்கை நுண்ணறிவு புகுத்தினாலும் இயந்திரம் இயற்கையாகுமா
  ஆனால் இயற்கையான வாழ்க்கை தான் தடுமாறி செயற்கையாகிற தென்பதை
  சொல்லும் ஆய்வு கட்டுரைக்கு வாழ்த்துகள்.

 2. இயற்கையான வாழ்க்கை முறையில் வாழ்வதற்கு நமது முன்னோர்கள் அவர்களுடைய மெய்ஞானம்,அன்பு,பாசம்,நேசம்,மகிழ்ச்சி மற்றும் அனுபவத்தை ஓலைச்சுவடியாகவும் ஆவணமாகமவும் , புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள். இன்றைய நவீன உலகில் அலைபேசி , கணினி , மின்சாரம், போன்ற மனித அறிவினால் கணடுபிடிக்கப்பட்ட பொருட்கள் நமது அன்றாட வாழ்க்கைக்கு தவிர்க்க முடியாதவை. நமது முன்னோர்கள் வௌயிட்டதை மென்பொருள் பொறயியலில் (செயற்கை நுண்ணறிவு அல்ல , Not Artificial Intelligence) அறிவு மாற்றத்தை ஏற்படுத்தினால், நமது முன்னோர்களுடைய அறிவை அறிந்து , அவர்களை முன்னுதாரனமாக எடுத்துக் கொண்டால் ந்ம் அனைவரும் மெய்ஞானத்துடனும்,அன்புடனும்,பாசத்துடனும்,நேசத்துடனும், மகிழ்ச்சியுடன் இயற்கையான வாழ்க்கை முறையில் வாழ்வதற்கு உதவியாக, ஏதுவாக இருக்கும். நண்பர் சத்தியமணி கருத்துக்கு நன்றி ! வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *