கிரகம் பிடித்து ஆட்டுகிறது
அண்ணாகண்ணன்
‘உன் கிரகம் சரியி்ல்லை’
என்ற ஜோதிடனைப் பார்த்துக் கேட்டேன்:
‘உனக்கு எப்படிப்பட்ட கிரகம் வேண்டும்?
காற்றும் நீரும் வெளிச்சமும்
எந்த விகிதத்தில் இருக்கலாம்?
அங்கே உயிரினங்களின்
உருவும் நிறமும் குணமும்
எவ்வாறு அமையலாம்?
என்னிடம் சொன்னால்
ஆவன செய்கிறேன்.
வானில் அதை
எங்கே நிலைநிறுத்தட்டும்?
இங்கேயா? அங்கேயா?
அது எப்படிச் சுழல வேண்டும்?
இடப்புறமா? வலப்புறமா?
நம் விருப்பப்படி இரவு பகல்களை
சுருங்கி விரியச் செய்யட்டுமா?
துணைக்கோள் ஏதும் வேண்டுமா?
………………………….’
ஓட்டம் எடுத்தான் ஜோதிடன்.
கிரகங்கள் இரகசியமாய்க் கண்சிமிட்டுகின்றன.
===========================
படத்திற்கு நன்றி – http://a1star.com
நானும் சிரிக்கிறேன் உங்கள் நல்ல கற்பனையை அல்ல நிசத்தை எண்ணி. நல்ல கவிதை. வாழ்த்தகள்