ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 27
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இயற்கையும், மனிதனும்
______________
“நேற்று நமது ரொட்டியில் குருதியைக் கலந்து அதை உண்டோம். நம் குடிநீரில் கண்ணீர்த் துளைகளைக் கலந்து அதை அருந்தினோம். ஆனால் இன்று நாம் காலைக் கன்னிகளின் கைகளிலிருந்து வெகுமதியாக வாங்கத் துவங்கி பழங்காலத்து இனிய வசந்தத்தின் நறுமண ஒயினைக் குடித்தோம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
______________
இயற்கை அழிக்கும் மனிதன்
______________
புள்ளினம் புலம்புவதைக் கேட்டு
“அழகிய பறவைகளே !
அழுவதின் காரணம் கூறுவீர்”
என்றேன்.
அருகினில் பறவை ஒன்று
கிளை முனையில் அமர்ந்து
பேசியது :
“ஆதாமின் புதல்வர் கோர
ஆயுதங்கள் ஏந்தி
எம்மை எதிரி களாய் எண்ணி
எம்மோடு போர் புரிய
இந்தக் களத்துக்கு
வந்திடும் வேளை இது !
விடை பெற்றுக் கொள்ளும்
ஒவ்வொரு பறவையும் !
மனித ஆவேசத்துக்கு முதலில்
பலியா காமல்
யார் தப்பிப் பிழைப்பார்
என்பதை
யாம் அறியோம் !
______________
யாம் செல்லும் இடமெல்லாம்
எம்மைத் தொடரும்
மரணம் !”
குன்றின் சிகரங் கட்குப்
பின்புறத்தில்
குப்பென எழுந்திடும் பரிதி
வழுக்கிச் சரியும்
உச்சாங் கிளைகளின்
கிரீடத்தில் !
அந்த அழகை வியந்து
என்னைக் கேட்டேன் நான் :
“இயற்கை வடித்த அற்புதத்தை
ஏனழித்து விட்டுச்
சூனிய மாக்க வேண்டும்
இந்த
மானிடக் கும்பல் ?
______________