– தேமொழி

தனிமையிலே …

Maya-Angelou

கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி

 

வாழ்வின் உண்மையை உணர்ந்திராத
எனது உறக்கமற்ற நேற்றிரவில்
என்னில் எழுந்தது ஓர் சிந்தனை …
எங்கே தேடுவேன்?
என் ஆன்மாவிற்கான புகலிடத்தை,
எங்கே தண்ணீரே தாகத்துடன் நீர் தேடாத,
ரொட்டியும் கல்லாகிப் போகாத இடத்தை
எங்கே நான் காண்பேன்?
எனக்கு விடையொன்று கிடைத்தது,
அதுவும் சரியென்று தெரிந்தது,
அது… யாரும், எவரும் இங்கு
தனிமையில் வாழ முடியாது.

தனியே தன்னந்தனியே
யாரும், எவரும் இங்கு
தனித்து வாழ்ந்திட இயலாது.

செல்வந்தரும் சிலர் இங்குள்ளனர்
மகிழ்ச்சியை சிறிதும் வாங்கமுடியாத
பயனற்ற பணக்குவியலுடன்,
ஊளையிட்டே  எங்கும் அலையும்
மோகினிப்பேய்களான மனைவியருடன்,
உள்ளத்தின் சோகமதை கீதமாக  இசைக்கும்
துயரத்தில் வாடும் பிள்ளைகளுடன்,
திறமையான அவர்களது
மருத்துவர்களாலும் குணப்படுத்த முடியாத
கல்லாய்ப்போன மனதுடன்
ஆனால் … யாரும், எவரும் இங்கு
தனிமையில் வாழ முடியாது.

தனியே தன்னந்தனியே
யாரும், எவரும் இங்கு
தனித்து வாழ்ந்திட இயலாது.

சொல்வதைக் கவனமாகக்
கேட்பீர்கள் என்றால்
சொல்லிடுவேன் அறிந்து கொண்டதை
நானும் உங்களுக்கு.
புயல் மேகங்கள் சூழ்கின்றன
பெருங்காற்றும் வீசத் துவங்கும்
மனிதஇனம் துயரத்தில்
வாடுகிறது
அவர்தம் புலம்பலும்
கேட்கிறது
ஏனெனில் … யாரும், எவரும் இங்கு
தனிமையில் வாழ முடியாது.

தனியே தன்னந்தனியே
யாரும், எவரும் இங்கு
தனித்து வாழ்ந்திட இயலாது.

______________________________

Alone – Poem by Maya Angelo
______________________________
Lying, thinking
Last night
How to find my soul a home
Where water is not thirsty
And bread loaf is not stone
I came up with one thing
And I don’t believe I’m wrong
That nobody,
But nobody
Can make it out here alone.

Alone, all alone
Nobody, but nobody
Can make it out here alone.

There are some millionaires
With money they can’t use
Their wives run round like banshees
Their children sing the blues
They’ve got expensive doctors
To cure their hearts of stone.
But nobody
No, nobody
Can make it out here alone.

Alone, all alone
Nobody, but nobody
Can make it out here alone.

Now if you listen closely
I’ll tell you what I know
Storm clouds are gathering
The wind is gonna blow
The race of man is suffering
And I can hear the moan,
‘Cause nobody,
But nobody
Can make it out here alone.

Alone, all alone
Nobody, but nobody
Can make it out here alone.

Alone - Poem by Maya Angelou

மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *