ajay

கி.பி. [1044  – 1123]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபியாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

++++++

உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழிபெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளனர்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள்.  அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த்துள்ளார்.  உமர் கயாம் பாரசீக  அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம்.  நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது.

விழித்தெழு !  காலைப் பொழுது கல்வீசி

விரட்டும் தாரகை யாவும் இரவுக் கும்பாவில்.

ஆ ! கிழக்கே வேடன் கைப்பற்றி விட்டான்

சுல்தான் கோட்டையை சுருக்குக் கதிரால் !

+++++++++

AWAKE! for Morning in the Bowl of Night
        Has flung the Stone that puts the Stars to Flight:
        And Lo! the Hunter of the East has caught
        The Sultan’s Turret in a Noose of Light.

+++++++++++

​2.​ Dreaming when Dawn’s Left Hand was in the Sky
I heard a voice within the Tavern cry,
“Awake, my Little ones, and fill the Cup
Before Life’s Liquor in its Cup be dry.”

பொழுதின்​ இடது கை வான் தொடக் கனவெழும்​
விழுந்ததென் காதில் மதுக்கடைக் கூக்குரல்.
“எழுவீர் என் இளைஞரே, நிரப்புவீர் கிண்ணம்
உமது உயி​ரின்​ மது உடலில் வற்றும் முன்னம்.’

3. ​ And, as the Cock crew, those who stood before
​ The Tavern shouted — “Open then the Door !

​ You know how little while we have to stay,

​ ​And, once departed, may return no more.”
சேவல் கூவிட மதுக்கடை முன் நிற்போர்
சேர்ந்து கத்தினர் – “திறடா கதவை !
​​உமதறிவு அற்பம்​, ​வசிக்கப் போவது நாங்கள்
ஒருதரம் போனவர் மறுமுறை மீளார்.”

​ +++++++++++++++++++ ​

++++++++++++

தகவல்:

  1.  http://www.acole.com/novels/timuras/khayyam.html

2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm

  1.  http://www.omarkhayyamrubaiyat.com/text.htm
  1.  https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam  [November 17, 2015]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.