வானத்தைவிடப் பரந்து விரிந்தது

2

– தேமொழி.

 

வானத்தைவிடப் பரந்து விரிந்தது

கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
மொழிபெயர்ப்பு – தேமொழி

 

எல்லையற்ற கற்பனைத் திறனில்
நீலவானைவிடப் பரந்து விரிந்தது
அருகருகே வைத்து ஒப்பிட்டால்
மூளையின் ஆற்றலுக்கு உட்பட்டு
அதனுள் அடங்கிவிடும் பரந்தவானமும்

அளவற்ற கற்கும் ஆற்றலில்
நீலக்கடலை விடவும் ஆழமானது
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டால்
மூளை ஒரு கடற்பஞ்சென உறிஞ்சிட
வாளிக்குள் ஒடுங்கிவிடும் ஆழ்கடலும்

நிகரற்ற படைப்பாற்றல் தகுதியில்
ஒப்பற்ற கடவுளின் சக்திக்குச் சமம்
எடைக்கு எடை ஒப்பிடுகையில்
மூளை கடவுளைவிட மாறுபடுமெனில் அது
இசையின் சந்தங்களென வேறுபடுவதே

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

emily-dickinson-everett
The Brain—is wider than the Sky—

– Emily Dickinson

 

The Brain—is wider than the Sky—
For—put them side by side—
The one the other will contain
With ease—and You—beside—

The Brain is deeper than the sea—
For—hold them—Blue to Blue—
The one the other will absorb—
As Sponges—Buckets—do—

The Brain is just the weight of God—
For—Heft them—Pound for Pound—
And they will differ—if they do—
As Syllable from Sound—

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வானத்தைவிடப் பரந்து விரிந்தது

  1. மிகச் சிறந்த தமிழாக்கம் தேமொழி.  எமிலி டிக்கின்ஸன் தமிழில் எழுதிய இனிய கவிதை போல் தெரிகிறது.  பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்

  2. பாராட்டிற்கு மிக நன்றி ஜெயபாரதன் ஐயா.  தொடர்ந்து ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்து வழங்கி வரும் உங்களிடம் இருந்து பெறும் பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது, மீண்டும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *