நஷ்டம் மட்டும் எனக்கா..?

1

காயத்ரி

என் உள்ளக் கதறலை
யார் அறிவார்?
உச்சிக்கு மேலே அரிவாள்!

என் உதிரம் பிடிக்கப்
புவியின் மடியில்
கிண்ணம் – சில நொடியில்
நான் இறக்கப்போவது
திண்ணம்.

பலிபீடத்தில் எனை நிறுத்தி
எவனோ செய்கிறான்
நேர்த்தி!

மனிதா..!
கஷ்டம் தொலைந்தது
உனக்கு:
நஷ்டம் மட்டும் எனக்கா?

மூடனே!
வாழ்க்கை ஒரு வட்டம்:
வீழ்பவன் எழுவது
வாழ்வியல் திட்டம்!

மீண்டும் பிறப்பேன்
ஆணாக..!
உன்னை அறுப்பேன் ஆடாக..!

(காயத்ரி, கீழக்கரை, டிபிஏகே கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் 3ஆம் ஆண்டு மாணவி)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நஷ்டம் மட்டும் எனக்கா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *