கவிதைகள்பொது

புத்தாண்டுக் கவிதை!

-சரஸ்வதி ராசேந்திரன்

புதுபொலிவுடன்  வருக
புத்தாண்டே நீ  வருக
போன நாட்களெல்லாம்                   HappyNewYear
புண்மிகு     நாட்கள்
புண்ணுக்கு மருந்தாய்
புலர்ந்திடு நல்பொழுதாய்
மருவும் நெஞ்சத் தீமைகள்
மாய்த்து   ஞானம்  தருக
வறுமைகள்  போக்கி
வன்முறை    நீக்கி
பயங்கரவாதங்கள்
படுதுயர் தீவிரவாதங்கள்
சாதிச் சண்டைகள்
சமயப்  பேதங்கள்
சிதைத்து  மாய்த்திட வா
இன்னல்கள்   மாய்த்து
இன்னருள்    சேர்த்துப்
புவியில் சாந்தம் நிலவிட
புதுப் பொலிவுடன் வருக வருகவே!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க