அம்மா வீடு!

-கவிஜி 

என் வீடு
அம்மா வீடாகிப்
போனது…

வந்து போகத்
திருவிழாக்கள்
தேவைப்படுகின்றன…

என்குழந்தையை விட
அண்ணனின் குழந்தையைச்
சற்று அதிகமாகவே
கொஞ்சுகிறார் அப்பா…!

ஒரு பொம்மையைக் கூட
கேட்டுத்தான்
எடுக்க வேண்டி இருக்கிறது…
சிரித்துக் கொண்டே
மறுத்து விடுகிறார் அண்ணி…

எனதறையில்
பழைய பொருட்கள்
போட்டு வைத்திருக்கிறார்கள்
எனது பள்ளிக்காலச் சீருடைகள் உட்பட…

ஏனோ இப்போதெல்லாம்
அம்மா வீட்டை
எனக்கும்
அம்மா வீடென்றே
சொல்லத் தோன்றுகிறது…!

 

 

About கவிஜி

நான் கவிஜி.. (B.COM, MBA, DIP IN ADVERTISING.) கோவையில் வசிக்கிறேன்... கவிதை தேடுகிறேன்.... கதைகளாய் கிடைக்கிறேன்..... காடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது.... குறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது... பிடிக்கும்....... வாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்.... தாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்... "சே" வின் மிகப் பெரிய பற்றாளன்... சக மனிதனை மதிப்பவன்.... மனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்... தொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்....

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க