ருத்ரா இ.பரமசிவன்

ரமண மகரிஷி

images

குத்துப்பாறையும் புல்லும் மொய்த்த‌
குன்றம் தன்னில் பள்ளி கொண்ட‌
கோவணப் பெருமாள் கோலோச்சிய திரு
அண்ணாமலை யென்னும் மலையுண்டு.
ஆயிரம் இமயமும் அதிலே அமிழும்..அந்த‌
அழகிய அமைதியின் புன்சிரிப்பில்
மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே
பிரம்ம சூத்திர பாஷ்யங்கள் ஆகும்.
பேசாத மொழியில் மொழி ஏதுமில்லை.
தமிழைத்துப்பிய வடமொழி என்றும்
வடமொழி மற்றொரு தமிழ்மொழிஎன்றும்
பட்டி மன்றப் பாய்ச்சல்கள் இல்லை.
பேசாதிரு!பேசாதிரு!பேசாதிரு!
பேசியதெல்லாம் விந்துக்கள் ஆகி
விந்துக்கள் எல்லாம் காடுகள் ஆகி
காடுகள் தோறும் விலங்குகள் தான்.
வேள்வி வளர்த்து நம் தீயை எல்லாம்
யாருக்கு கொடுக்க இயலும் அறிவாய்.
தீயே தீக்கு தின்னக்கொடுக்க..இந்த‌
சாம்பலுக்கு ஏது உரிமையடா?
மறைத்து மறைத்துச் சொன்னாலும்
காதுக்குள்ளே சொல்லூற்றி
நாலு விதமாய் சொன்னாலும்
அஞ்ஞானத்தின் வர்ணம் தான் அது
அதர்மத்தின் கொடுங்காடுகள் தான்.
மனிதன் நிழலை மனிதன் உரித்து
மணிச்சுடர் ஆடை உடுத்துவதே
மகா மகா திரு நிர்வாணம்.
நிர்வாணமாய் நிற்பவருக்கு
ஆண் குறியென்ன? பெண் குறியென்ன?
ஆட்டங்கள் போதும்!பாட்டுகள் போதும்!
ஆகாசத்தைக் காய்ச்சிடுவீர் அதன்
அமுதச் சாற்றை அருந்திடுவீர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.