ருத்ரா இ.பரமசிவன்

e5eb2d27-13d1-47ad-a7a2-6d3d3e910f98

ஆரண்ய காண்டம்
அன்னையின் மணி வயிறு!
கசிவு வெளிச்சங்களில்
அவள் முகம் தெரிகிறது
ஆயிரம் கோடி பிரகாசமாய்.
அவள் இன்புற்ற கீற்று உணர்ச்சிக்கோடுகளும்
அவள் நடுக்குற்ற வெடவெடப்புகளும்
என்னுள்
வர்ணங்கள் பாய்ச்சின.
ஊசிமுட்களும்
கருப்பு இலைகளுமாய்
அவள் காலம் தள்ளியபோதும்
அவளது
ஒரே ரோஜாவாய்
அவள் நாளங்களில்
மின்னல் வெட்டுவேன்.
பத்து மாதங்கள் கழன்றபின்
ஆண்டுகள் ஆண்டுகள் ஆண்டுகள்
பல முதிர்ந்த பின்
நானும்
அவளுக்கு காக்காய் முள்ளாய்
ஆன பின்னும்
கருப்பையில் கிடப்பது
அவள் நிழலா?
என் நிழலா?
உவ்வா…உவ்வா..
ஆம்
இது என் பழைய குவா குவா இல்லை.
இந்த மசக்கை வாந்தியில்
அம்மா
நீ காட்டினாய்
மீண்டும் ஒரு
அம்மாவின் மொழி பெயர்ப்பு என்று!

===================================================

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க