மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!
பவள சங்கரி
“அனைவருக்கும் கல்வி” என்ற திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் மற்றும் வருவாய் குறைந்த பிரிவினருக்காக அனைத்துப் பள்ளிகளிலும், 20 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை தெரிவிக்கிறது. எத்துணைப்பெரிய பள்ளிகளாக இருப்பினும் இப்பிரிவினருக்கு நன்கொடை இன்றி பள்ளிகளில் சேர அனுமதி வழங்குவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளிலுள்ள கல்வி அலுவலர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். சேர்க்க மறுக்கும் பள்ளிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. நல்லதொரு வாய்ப்பினை தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.