கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அபஸ்மார புருஷன் ‘’முகிலன்’’ அறியாமை போக்கிட
தில்லை நடராஜர் தன் காலடியில் வைத்து அழுத்தி
நடனம் புரிந்தார்….அந்த ஞானத்தை அளிக்க வல்ல
அயக்கிரீவர் ஆடுகையில் ஆவும் முகிலன் போல்
படுத்து இருப்பதைக் காட்டுவதாகத் தோன்றுகிறது….
மாப்பிள்ளை போல ‘’ஆப்பிள்ளை’’ ஆடுகிறார்….
’’காலடி சங்கரர் கற்றதை, கோகுலக்
காலடியில் பெற்றது கோமாதா: -காலால்
அகிலம் அளந்த அயக்ரீவர் காலில்
முகிலனாய்த் தூங்குது மாடு’’….
“அன்றா டமதிகாலை ஆரம்ப ஆனந்தம்
மன்றாடும் மத்யானம், மாலையில்-சென்றோடும்,
CALENDER காட்டும் கவலைதான், கண்ணனின்
கால்UNDER கன்றாய்க் கிட”….கிரேசி மோகன்….