வீரச்சிறுவன்!
பவள சங்கரி
வீரர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் வீரர்களாகவே அவதரிக்கிறார்கள். விவேகமும், வீரமும் இணை பிரியாதது!
போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொல்கத்தா சாலையொன்றில் வெகு காலம் முன்பு நடந்த உண்மைச் சம்பவம் இது. குதிரை வண்டிகளே முக்கியமான போக்குவரத்து சாதனமாக இருந்த காலம் அது. ஒரு தாயும், குழந்தையும் குதிரை வண்டியில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. அந்தக் குதிரைக்கு திடீரென்று மதம் பிடித்துவிட, சாலையில் கண்மண் தெரியாமல் தாறுமாறாக வண்டியை இழுத்துக்கொண்டு ஓடுகிறது. கட்டுப்படுத்த இயலாத வண்டிக்காரரும் கீழே தள்ளப்பட்டார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் செய்வதறியாது திகைத்து ஓடுகின்றனர். என்ன அதிசயம்! ஒரு சிறுவன் மட்டும் அந்த வேகத்தைக் கிழித்துக்கொண்டு அதனூடே புகுந்து அந்தக் குதிரையை கட்டுப்படுத்தி அந்தத் தாயையும், குழந்தையையும் காப்பாற்றிவிடுகிறார். யாரந்த பிறவி வீரர்? பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என உலக மக்களால் கொண்டாடப்பட்ட சிறுவன் நரேந்திரன்தான் அந்த வீரச்சிறுவன்!
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த இதுபோன்ற நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் படிக்க மனத்தில் வலிமை உண்டாகிறது. பதிவுக்கு மகிழ்ச்சி.
அன்பன்,
மீ.விசுவநாதன்