இலக்கை அடைய முயற்சி தேவை பள்ளி மாணவர்களிடம் டி .எஸ்.பி. பேச்சு

எல். சொக்கலிங்கம்

0d5c0ef9-cbc9-496c-a90e-5e3d873ac649

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தின விழாவில் இலக்கை அடைய முயற்சி தேவை என தேவகோட்டை டி . எஸ்.பி .பேசினார்.

விழாவில் ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை காவல் ஆய்வாளார்கள் ரமேஷ்,பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை டி .எஸ்.பி.கருப்பசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உலக யோக தினவிழாவினையொட்டி நடைபெற்ற ஆசிரியர் – மாணவர் மேம்பாட்டிற்கு யோகாவின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற

பேச்சுப்போட்டி,கட்டுரைபோட்டி,கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற ச.கார்த்திகா ,சு.சங்கீதா, மு.விக்னேஷ் ,க.ராஜி ,மு.ராஜேஸ்வரி ,பீ .ஜெனிபர்,அ.உமா மகேஸ்வரி , பா.சங்கீதா ,பா .பாக்கியலெட்சுமி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.

55abe121-2208-4bfc-a809-2844f33bc2da

மாணவர்களிடம் டி.எஸ்.பி.பேசுகையில்,யோகா செய்வதன் மூலம் உங்கள் மனம் தூய்மை ஆகும்.எந்த செயலை செய்தாலும் அதனை தெரிந்து,அறிந்து,புரிந்து செய்ய வேண்டும்நுனிப்புல் மேய கூடாது.இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும்.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.மனபலம் தருவது யோகா ஆகும்.முழுமையான அறிவில் மேம்பட்ட நல்ல சமுதாயம் உருவாக்குவதற்கு தகுதி உடையவர்கள் ஆசிரியர்களே.முயலும்,ஆமையும் கதையில் ஆமையும் ஜெயிக்கும்.அதற்கு காரணம் தன்னம்பிக்கை ஆகும்.தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.முயலும் ஜெய்க்கும் .ஆனால் முயலாமை ஜெயிக்காது.நான் என்னுடைய இளமை காலத்தில் என்னுடைய உழைப்பில் கிடைத்த பணத்தை கொண்டு கல்வி பயின்றேன். எனது பெற்றோரும்,எனது உறவினர்களும் எனக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பேசுவார்கள்.எனது முயற்சியினால் தன்னம்பிக்கையுடன் படித்து இந்த அரசு வேலைக்கு வந்துள்ளேன்.காவல் துறை பணியை நான் மிகுந்த கவுருவமாக நினைக்கிறேன்.படிக்கும்போதே பல்வேறு தகவல்களை நீங்கள் அறிந்து கேட்டு தெரிந்து கொண்டு பல்துறை வித்தகராக வளர வேண்டும்.நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.அதற்கு யோகாவை முழுமையாக பயன்படுத்துங்கள் என்று பேசினார்.மாணவ,மாணவியர் பரமேஸ்வரி,வெங்கட்ராமன்,தனலெட்சுமி,நந்த குமார்,பரத்குமார் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை டி .எஸ்.பி.கருப்புசாமி பரிசுகளை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்,பாஸ்கரன் உள்ளனர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க