பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி

நாகை வை. ராமஸ்வாமி

Neela

அரும் பெரும் ஐயாறு தியாகராசனும்                                     

மூவரில் பெருமைமிகு முத்துசாமியும்                                     

சீர்மிகு சிங்காரி நீலாயதாக்ஷி யுனை                                         

பாரும் அடி பணிய பாடினரே பாராட்டி

பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி                                

சிவராஜதானி கொலுவுறும் சிவமய ராணி                                

புவனம் காக்குமுன் பூந்தளிர் பதம் போற்றி                               

தவமுடன் பாடிட எனக் கருள் தந்தனையே

குவலயம் போற்றும் பாலா நீலாயதாக்ஷி                                                  

பாலும் தேனும் பஞ்ச அமிர்தமுடன்                              

கோலாகலமாய்  சுகந்த நீரும் கலந்துன்                                       

காலடி சேர்த்தோம் ஏற்றிடுவாய் என்னம்மே

கந்தனும் அண்ணனும் தந்தை தாய் உடனிருக்க                            

நந்தியவன் மெய்மறந்து சுற்றியே வலம் வர                             

விந்தைக் கோலமதை புந்தியதில் பதித்தனனே                        

சிந்தையில் வந்தமரும் சிந்தூர வண்ணவளே

என்றும் பாவமுடன் ஏலாதிருக்கு மெனை                            

இன்பமுடன் நின் திருவடி நினைத்திட                                    

அன்பும் அருளும் தயையும் தந்திடுவாய்                                  

பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க