மீ.விசுவநாதன் 

ga0078
மஞ்சள் பிடித்து வைத்து
மனத்தோடு புல்லைப் போட்டு
கொஞ்சம் அமைதி யோடு
குணவானே பிள்ளை யாரே
தஞ்சம் அடைந்தே னுன்னை
தவறிலாத பொழுதைத் தந்து
நெஞ்சி லிருப்பாய் என்றால்
நினைவெல்லாம் நிறைந்தி ருப்பான் !

வேலை துவங்கி னாலும்
வேதாந்தம் கற்கும் போதும்
மேலை நாட்டிற் காக
விமானத்தில் செல்லும் போதும்
சேலை துவைக்கும் போதும்
சிறுபொழுதைச் செலவு செய்து
பாலை நிகர்த்த “பிள்ளை
யார்”பாதம் பணிந்தி ருப்போம் !

ஞானம் பரந்த நெற்றி!
நம்பிக்கை ஊரும் கண்கள் !
வானம் பரந்தி ருக்கும்
வரையிலாத பக்தி தந்தம்!
பானை வயிற்றுக் குள்ளே
பசிநீக்கும் வள்ள ளாக
ஆனை முகனை எண்ணி
ஆனந்தம் பெற்று வாழ்வோம் !

( 05.09.2016 04.07 am

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆனை முகன்

  1. நன்று சொன்னீர் …எளிமையான தோழமையான தெய்வம் எங்கள் பிள்ளையார் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.