திரு.ஞானச்செல்வன் என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை.
மரியாதைச்சொற்கள் என்றால், ‘ஐயா, திருமதி, திருவாளர், ஸ்ரீமதி ‘ , மேலும் கையெழுத்து முன்னால் ‘உங்கள் அன்பன், இவண்’ , கடிதங்களில் என்ன போடுவது போன்றனை என நினைத்தேன். ஆனால் கொடுத்திருக்கும் புஸ்தக பிரதிகள் வேறு கதையை சொல்கிறன.
உதாரணமாக , பலர் ழ வை சரியாக உச்சரிப்பதில்லை என்கிறார். ஒருவர் தமிள் என்றால் அதில் யாருக்கு என்ன மரியாதை கெட்டுப்போகுது ? ஒருவர் தாய்மொழியில் ழ் மெய்யினம் இல்லை என்றால், அதில் கவலைப்படவோ, மற்றவர்களை தூற்றவோ என்ன இருக்கு? ஒவ்வொருவர் தாய் மொழியையும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும், ஏன் என் தாய்மொழிபோல் உன்னுடயது இல்லை என்பது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க தவறுவதாகும்.
‘தமிலர் கொண்டாடி மகிள்வோம்’ என்பது ஏற்கக்கூடியதே, ஏனெனில் அது அவர் சூழலில் கற்றது, மற்றவர்கள் அதை புரிந்து கொள்கின்றனர். நாம் மற்றவர்கள் பேச்சை வலிய, அவர் கேட்காமல் “திருத்தும்” மனப்பான்மையை கைவிடவேண்டும், மற்றவர்கள் உச்சரிப்பையும் குறைகூருவதை தவிர்க்கவேண்டும்.

அன்புடன்
வ.கொ.விஜயராகவன்