மகாத்மாவே மன்னியுங்கள்
ரா.பார்த்தசாரதி
கண்ணியம், ஒழுக்கமற்ற கனவான்களின் விமர்சனமும்,
தங்கள் கொள்கைகளை மறந்து பின்பற்றுவது போன்ற நடிப்பும்
உங்கள் பிறந்த நாளை விடுமுறைக்காக ஏற்படுத்தினாலும்,
உங்கள் புகழும் மாண்பும் மங்க போவதில்லை !
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையை கடைபிடித்தவரே
உங்களிடம் உண்மையே உன் விலை என்ன கேட்கும் கனவான்கள் உள்ளனரே
சத்ய சோதனை என்பது காட்சி பொருளாய் இருப்பது புத்தகத்தில் மட்டுமே
இன்றைய காலகட்டத்தில் இது சோதனையாய் இருப்பது மட்டுமே !
கைராட்டை சுற்றி ஆடை நெய்த காலம் மறைந்து விட்டது
அயல்நாட்டு பொருட்கள் மனம் நாட்டம் கொண்டுவிட்டது
ஆடம்பரத்தில் எங்களை நாங்கள் இழந்து விட்டோம்
தங்கள் எளிய பாதையினை நாங்கள் மறந்துவிட்டோம் !
அன்று சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தினீர்கள்
இன்று மாநில பிரிவினை போறே நடத்துகிறார்கள்
அன்று தொடர்ந்த காஷ்மீர் பிரச்னை இன்றும் தீர்ந்தபாடில்லை
என்று தீருமோ, போரில் முடியுமோ எனத் தெரியவில்லை !
நீருக்கு சண்டை போட்டாலும், மது அருந்த சண்டை போடமாட்டோம்,
தீண்டாமையை ஒழித்தாலும் , இனம், ஜாதியை,மறக்காத மக்கள் மனம்
விளம்பரத்திற்காக, சிலை வைத்தோம், கடற்கரையில் நிற்கவைத்தோம்,
உங்கள் அருமை அறியாத எங்களை மன்னிக்க வேண்டுகின்றோம் !