பவள சங்கரி

14523106_1225986744109514_6103787041079987971_n

எத்தனை எத்தனை பிறவியம்மா
எல்லாம் உன் அருளம்மா
அத்தனையும் பாவங்களன்றி
வரமாக்கிய வடிவுடைநாயகியே

நாடகமான வையகத்தில்
பூடகமான மனமின்றி
சேடகனாய் வாழாமல்
சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே

வாதமும் விநோதமும் வாழ்வானதும்
நாதமும் வேதமும் கரைசேர்ப்பதும்
சகாராவிலும் மொட்டவிழ்வதும்
சகலகலாவல்லி நின் திருவிளையாடல்

கருத்திலுறை காத்தியாயினி
கடம்பவனத்தின் காவல்காரி நீ
அடங்காதார் மனக் கூட்டிலும்
அகம்நிறைந்து முகமலரச் செய்பவள்!

அன்புறுவாய் அகிலம் ஆள்பவள் காளி
புன்முறுவாய் புவியாவும் பொழிபவள் பூமாரி
நான்மறை வித்தாய்த் திகழ்பவள் தேவி
எந்நாளும் எமையாளும் எழிலரசி ஏழவார்குழலி!

போற்றி! போற்றி! ஓம் மகாசக்தியே போற்றி!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஓம் மகாசக்தியே போற்றி!

  1. நாடகமான வையகத்தில்
    பூடகமான மனமின்றி
    சேடகனாய் வாழாமல்
    சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே என்று நவராத்திரி நல்ல நாளில் ஓம் சக்தி மகமாயிக்கு (சகலகலாவல்லிக்கு) முகமலர்ந்து பாடலை புனைந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருளாருமான அன்னை பவள சங்கரி திருநாவுக்கரசுக்கு
    எனது மனமார்நத பாராட்டுக்கள் நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *