-கவியோகி வேதம்
அப்பனே! மெத்தக் கடினம்! – தியான
–ஆளுகைச் சுற்றில்நீ வந்தாலே! (அப்பனே)
வெப்பமும் ஆவியும் போலே – சக்தி
–விரலுக்குள் உன்னைப்பிடிப் பாளே!
நித்தமும் மூச்சைப் பிடிப்பாய்! — சக்கர
–நீள்சுகம் அங்க னுபவிப்பாய்! – அவள்
கொத்தாய்உன் மேனி பிடிப்பாள்! – பேசிக்
–கொஞ்சியே சித்தும் வடிப்பாள்! (அப்பனே)
உனக்குள் பரவசம் தந்தே — மூளை
–உச்சியில் நின்றே சிரிப்பாள்! – அவள்
தினமும் சிலரை அனுப்பி- வினைத்
–தினவைஉன் மூலமே தீர்ப்பாள்! (அப்பனே)
சக்தியின் பித்தில் இருந்தே – உன்னால்
–தப்பவே ஒண்ணாது! – சொன்னேன்! — ஆக
பக்தியும் த்யானமும் வேண்டின் — சக்திப்
–பரப்புக்குள் போகும்முன் யோசி! (அப்பனே)

Leave a Reply