நடிகராக மாறிய நாவலாசிரியர் – திரைச்செய்தி
பாலு மலர்வண்ணன் இயக்கியுள்ள ‘ஒத்தவீடு’ திரைப்படத்தில், சரித்திர நாவலாசிரியர் கெளதம நீலாம்பரன் அவர்கள், மருத்துவராக நடித்துள்ளார். அறுபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி குவித்துள்ள கெளதம நீலாம்பரன், முதல் முறையாக திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அவரிடம் நடிகை வடிவுக்கரசி, அவரது மகளாக நடிக்கும் கிரண் மைக்கு மருத்துவம் பார்ப்பது போன்ற ஒரு காட்சி சென்னையில் உள்ள பாபாஹவுசில் படமானது. அந்த காட்சியில் இடம் பெற்ற ஒவ்வொரு ஷாட்டிலும், இயல்பாக ஒரே டேக்கில் நடித்து படப்பிடிப்பு குழுவினரையே அசத்திவிட்டாராம்! அடுத்த படம் எப்போ சார்?