பொது

“சாதுர்யம்” – திறமைக்கு சவால் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 09:00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் புத்தம் புதிய ஆன்மீக வினா விடை நிகழ்ச்சி “சாதுர்யம்”.

இருபத்தின் நான்கு மணி நேரமும் இறையுணர்வை வளர்க்கும் வகையில் பல்வேறு வகையிலான பக்தி நிகழ்ச்சிகளை வழங்கிவரும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் இந்நிகழ்ச்சியில் மணவர்கள் கலந்துகொண்டு தங்களது ஞான உணர்வை வெளிக்கொணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளித்து திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

தொலைக்காட்சியே பொழுதுபோக்குக்ககத்தான் என்ற நிலையில் பொழுதை பயனுள்ள வகையில் கழித்திடவும், ஆன்மீக அறிவை அதிகரித்துக்கொள்ளவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சியில் எழுப்பப்படும் வினாக்களுக்கு பங்கேற்றுள்ள மாணவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் விடையளிக்கும் வகையில் ஆர்வத்தைத் தூண்டும் அற்புதம் இந்நிகழ்ச்சியில் அரங்கேறுகிறது.

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க