வேதா. இலங்காதிலகம்.

 

எழுத்துக் கூட்டக் கருத்து எத்துணை இன்பம்.

unnamed

கழுத்துச் சாய்த்துத் தேடினால் கோடியருத்தம்.

எழுத்து வரிசையில் சரித்திரம் கதைகளாய்

இழுத்தும் கோர்க்கலாம் சந்தப் பாமாலை.

ஒலியால் வல்லின, மெல்லின, இடையினமுண்டு.

ஓரெழுத்துக்கும் அருத்தம் உண்டு – நீ

சுகந்த எழுத்து பூ – பூரிப்பாய்.

மகிழ்ந்து அழைக்கும் எழுத்து வா.

 

நான்காயிரம்   ஆண்டினிறுதி  சுமேரியர்களிடையே உருவானது .

பின்னாக எகிப்து, சிந்துப்பள்ளத்தாக்கிலும் தொடர்ந்தது.

மின்னும் உயிரெழுத்துகள் பன்னிரண்டு வகை.

உன்னும் மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகும்.

பின்னும் உயிர்மெய் எழுத்துகள் இருநூற்றுப்பதினாறு.

ஓன்றான ஆயுதவெழுத்துமாக இருநூற்று நாற்பத்தேழு.

ஓன்றொன்றாய் சொற்கள் பிரித்து உண்மையறிதல்

இன்னுமுதத் தொடர்பாடல் எழுத்தால் தானே.

 

நாத (ஒலி) வரி வடிவம் எழுத்து.

மேதகு மொழியை நிலைநிறுத்துவது எழுத்து.

சாதனைக்குரிய எழுத்தின்றேல் மொழி ஏது!

மாதவ எழுத்து தலைமுறைக்கும் காவுகிறது.

ஆதனமாம் இலக்கணம் இலக்கியம் உருவானது.

போதகம் (நல்லுரை) ஐந்தாயிரமாண்டுக்கு முன்னானதாம் சிந்துவெளியெழுத்துகள்.

பேதமற பழந்தமிழெழுத்தும் அன்றே இருந்தது.

ஆயினும் எழுத்துமுறையா குறியீடாவென்பது சந்தேகமே…

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எழுத்து

  1. தை யில் புதுப் பொங்கல்
    வைத்தேன் என்னெழுத்துப் பொங்கல்
    ஐய.!.வல்லமை யிலிப் பொங்கல்
    மைவிழி நிறைய ஆனந்தம்.
    கை நிறைய வல்லமைக்கு நன்றிகள்.
    தையலிடுகிறேன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *