ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தர்ம சாஸ்த்ரம் (ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு)

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, தர்ம சாஸ்திரம். கல்வியாளர் ரமணி கேட்கும் சரமாரியான கேள்விகளுக்குத் தர்ம சாஸ்திரத்தை மேற்கோள் காட்டி, ஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்த்ரிகள் வழங்கும்  விளக்கங்களும் செய்திகளும் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

கணீரென்ற குரலில் கம்பீரமாக, தர்ம சாஸ்திரத்தை பற்றியும் அதனுடன் இணைந்த மனித வாழ்க்கை முறைகளை பற்றியும், வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் அவர் அளிக்கும் விளக்கங்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அற்புதங்கள்.

ஆன்மீகம், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகிய யாவும் பயனுள்ள வகையில் விளக்கப்படுவதால் இந்நிகழ்ச்சி இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக  இருக்கும். இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, ஒவ்வொரு சனிக்கிழமையும் முற்பகல் 11.30  மணிக்கு ஒளிபரப்பாகிறது.

============================

“உத்சவ்” (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 11 – 11.30  மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 – 8)

திருவிழா என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் நடைபெறும் பிரமோற்சவ நிகழ்வுகள் வாழ்வில்  காணக் கிடைக்காத பெரும் பேறுகள். இப்படி  புகழ்பெற்ற ஆலயங்களின் பிரமோற்சவ நிகழ்சிகளைக் கண்டு மகிழ ஸ்ரீ சங்கரா டிவி வழங்கும் புதிய நிகழ்ச்சி “உத்சவ்”.

திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 11 மணி முதல் 11.30  மணி வரையும் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் ஒளிபரப்பாகி வரும் இந்த  நிகழ்ச்சி, சைவ, வைணவ வேறுபாடின்றி அனைத்து ஆலயங்களிலும் நிகழ்வுறும் பிரமோற்சவங்கள் அழகிய முறையில் படம் பிடிக்கப்பட்டு, பக்திப் பாடல்கள் இணைக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆலயங்களின் திருவிழா நிகழ்சிகளும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்களை நேரடியாகச் சென்று கண்டு மகிழ, வாய்ப்பில்லாதவர்களுக்கு   வரப்பிரசாதமாக வரும் இந்நிகழ்ச்சி, ஒரு ஆன்மிகப் பொக்கிஷம்.

============================

தொடர்புடைய கட்டுரை:  தேவை, தமிழில் பக்தி தொலைக்காட்சி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.