“அனைவரும் உழைப்பாளிகளே”
சித்ரப்ரியங்கா ராஜா
அகிலம் காத்து அருளும் தெய்வமாய்
ஆருயிர் தந்து நம்முயிர் காக்கும் பெற்றோராய்
இறுகிய மனதை இளகச் செய்யும் கலைத்துறையினனாய்
ஈடற்ற சாகசங்களால் சாதனை படைக்கும் மாணவனாய்
உழைப்பே உயர்வென நம் சோற்றிற்கு வியர்வை சிந்தும் உழவனாய்
ஊழிகள் பல களைவதில் நல்ல மருத்துவனாய்
எத்தனை இடர்வரினும் நாட்டு எல்லையில் எதிர்கொள்ளும் இராணுவ வீரனாய்
ஏற்றங்கள் பல நல்கும் ஆற்றல்மிகு பொறியாளனாய்
ஐயங்கள்அகற்றி அறிவை விருத்திக்கும் ஆசிரியனாய்
ஒருவர் இருவரல்ல பலகோடி இவர் போன்றோர்!
ஓய்விற்குப் பின்னும் சோராது உழைக்கும்
சீரிய நல்மனிதர் இவர் அனைவரும் உழைப்பாளிகளே!
அண்டம் முழுதும் உள்ளோர் இன்று
என் அன்புக் கவிதையின் உள்ளே அடக்கம் !
யாதேனும ஒருவரை யான்விட்டு இருப்பின்
சினமேனும் கொள்ளாது சிறியேன்
பிழைபொறுத்து அருள்க!