இஸ்ரோவின் புதிய சாதனை!
பவள சங்கரி
நமது இஸ்ரோவின் மற்றுமொரு சாதனை பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக சூரிய ஒளியை பயன்படுத்தி கார்களை இயக்கும் முறையை உருவாக்கியுள்ளனர். நேற்று மாருதி ஆம்னி வண்டியில் இதை பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். இந்த காரின் மேற்கூரையில் சோலார் பேனல்களை வடிவமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அவர்களின் மற்றொரு கண்டுபிடிப்பான, புதுவகையான லிட்டானியம் பேட்டரியில் சேமித்து அதற்குரிய தனி மோட்டாரில் இயந்திரச் சக்தியாக மாற்றி கார் ஓட்டும் முறையை உருவாக்கிவிட்டனர். இதில் சில மாற்றங்களைச் செய்து வணிகரீதியில் கொண்டுவர உள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. நேற்று இவர்கள் பச்சைக்கொடி காட்டி வெள்ளோட்டம் விட்டது சூரிய சக்தி பயன்பாட்டின் வெற்றிக்கான பச்சைக்கொடி என்பதும் மிக மகிழ்ச்சியான செய்தி!
http://auto.ndtv.com/news/isro-demonstrates-solar-hybrid-electric-car-1688371
உகந்த கட்டுரை. இப்போது தான் ஆராவமுதனும், கீதா ஆராவனமுதனும் இஸ்ரோ பற்றி எழுதிய நூலை முடித்தேன். ஹோமி ஜே பாபா அவர்களும், விக்ரம் சாராபாய் அவர்களும் இட்ட வித்து இது. உலகத்தரம் அடைகிறோம். நினைத்தால் இந்தியனால் எல்லாம் முடியும். அவன் நினைக்கவேண்டுமே!