மூன்றாம் பால்
மூன்றாம் பால். – 1
உடல் உணர்வுப் பின்னல்
கடலான பாலின ஈர்ப்பு.
அடலான( போர்) தனிப்பட்ட உரிமை.
இடம் (விரிவு) கண்டது மேற்கில் (முன்பே)
புதுமை வழியுடைய இளையோர்
‘பால் புதுமையினர் ‘ அறிவு விரிவற்றோர்
பொதுமையான மனக்குளப்பத்தில் இன்று
சதிராடிச் சமூகத்தைக் குளப்புகிறது.
கல்வி, மருத்துவம், சட்டத்தில்
நல்ல விழிப்புணர்வு தேவை
திருநங்கைகள், திருநம்பிகள் மூன்றாவது
ஒருமித்து இருபதுக்கும் மேலானவை (பாலினங்கள்)
பெண் ஆணற்ற இடைநிலைப்
பாலினத் தோற்றம் கொண்டோர்
புராணத்தில் அலி, ஒம்போது
அரவாணி, பொன்னைக்கா பெயராகும்.
சுரபிகளின் தவறாய் தன்
மரபிலே மாற்றமான பாலினம்.
‘ இப்படிக்கு ரோஸ் ‘ விழிப்புணர்வை
அப்படி அள்ளிக் கொடுத்தது.
__________
மூன்றாம் பால். – 2
வள்ளுவனின் மூன்றாம் பால்
துள்ளும் உணாவுகளின் தொகுப்பால்
கள்ளெனும் காமத்துப் பால்
உள்ளுந் தோறும் இனித்தல்.
தொடுதல், அணைத்தல், உராய்தல்,
படுதல், அழுத்தலெனப் பல
விடுதலையற்ற உடல் மொழி
விடுதலை காம வேதனைக்கு.
காமத் தீயிவ் உடலவதிகள்
சாமகானம் பாடி இணைவில்
சமாதானமாவது மூன்றாம் பால்.
காதலின் சுடர் காமம்.
காதலதிகாரம் காமப் பாலில்
மோதலானது பதின்மத் தொடக்கத்தில்.
மூன்றாம் பாலின் நிறைவு
முழுதான வாழ்வு தரும்.
அறவழியில் இல்லறம் சமை!
ஆட்கொல்லி நோயை விலக்கு!
ஆளுமைப் பரத்தமையை ஒதுக்கு
அறவாழ்வுறுத்தலே வள்ளுவனின் மூன்றாம்பால்.
_______________
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-5-2017