கல்வீச்சு
சிறார்கள் பயிலும் பள்ளி யினருகேதான்
சிற்றறிவை மழுங்கச் செய்யும் மதுக்கடையாம்
சீறியெழும் சேலைகட்டிய மாந்தர்க ளங்கே
சிறு கூட்டமாய் வெகுண்டெழுந்து ஓடியதைச்
சின்னா பின்ன மாக்கினர் சாராயக்கடையெலாம்
சரக்குகள் எல்லாம் சட்டென உடைகிறது
சடுதியில் கல்வீச்சால் அழிந்தது மதுபாட்டிலெலாம்.!
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டமதை
எதிர்த்து இறக்கைகட்டிக் குதித்தனர் களத்தில்பலர்
அரசாங்கத் துக்தெதிராக போர்க்கொடி யேந்தி
அருகருகே அமைதியாய்ச் சென்றதொரு கூட்டம்
இருவேறு கும்பலாலெழுந்த பெருஞ் சர்ச்சையால்
ஒருவருக் கொருவர் பகையாயினர் முடிவில்
ஊர்வல மனைத்தும் கலைந்தது கல்வீச்சால்.!
கோரிக்கை பல வலியுறுத்தியிள மாணவர்பலர்
போராட்டத்தில் இறங்கின ரதைத் கலைக்கவல்ல
பாதுகாப்புப் படையின ரவரிடம் வாலாட்டினர்
கண்ணீர்புகை குண்டுகள் அங்கே வலுவிழந்தன
துப்பாக்கிக் காரருக்கு நன்றாகத் தெரியும்
தோட்டாவை விடகருங் கல்லுக்குபல மதிகமென்று
கல்வீச்சு கண்டு காததூரமோடினர் காவலர்பலர்..!
மருத்துவம் பொறியியல் அறிவியல் யென
மண்டிக்கிடக்கும் கல்லூரியில் படித்துவிட்டு
மனிதநேய எழுச்சியுடன் நியாயம் கேட்டு
மெரினாவில் கூடிநின்று கோஷம் போட்டனர்
மறியல்செய்ய மணலில் நுழைந்த மாணவனின்
மகத்துவம் அறியா தடித்தது காவல்துறை
முடிவில் கூட்டம் கலைய கல்வீச்சே உபயம்.!
படிக்கும் பருவத்தை பாழ்படுத்த வரும்
பலயிடை யூறுயதைப் புரிந்து கொண்டுநீயும்
பக்குவமாய் கோஷம்தவிர்!…வேஷம் வேண்டா.!
பாரைஉயர்த்திட நீநன்கு படித்திடல் வேண்டும்
பாருலகைக் காக்க ஒழுக்கமிகப் பழகப்பா
கல்வீச்சு வேண்டாம் தம்பியினி புதியதொரு
சொல்வீச்சால் புரட்சிசெய்ய முயற்சி செய்..!
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “கல்வீச்சு”
நன்றி கவிதைமணி வெளியீடு::29-05-17
படஉதவி:: கூகிள் இமேஜ்