Featuredஅறிவியல்ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

அறிவியல் தமிழ் – கற்றல் கற்பித்தல் – 2

-முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

 எழுத்துருக்கள் (Fonts)

           ஆங்கிலத்தில் எத்தனையோ எழுத்துக்கள் இருந்தாலும் TIMES NEW ROMAN மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழில் குறிப்பிட்ட எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை. அவற்றில் அபிராமி, அகல்யா, அகத்தியர், அக்னி, அஜந்தா, அகிலா, ஆட்சயா, அன்னை, அனுராதா, அரசு, இலக்கியா, அமலா, அப்பர், சந்திரா, ஹீனா, இளங்கோ, கம்பன், கண்ணதாசன், கோமளா ,நம்பி,ட்டினத்தார்,ருதி,ன்மொழி,மிழ்து,னவில்,ன்னி,ண்ணா,ந்தமிழ், சுரபி, பாமினி, மயிலை, லதா இவற்றுள் சில ஒருமொழியிலும் சில இரு மொழியிலும் இயங்கக் கூடியவை.

இணைய இதழ்கள்

           இணையம் வழி வெளியிடப்படும் இதழ்கள் மின் இதழ்கள் எனப்படுகின்றன தமிழில்.1.திண்ணை. www.thinnai.com 2 தட்ஸ் தமிழ் www.thatstamil.oncindia.in 3.வார்ப்பு www.vaarappu.com (கவிதைக்கென்று வெளிவரும்) 4.பதிவுகள் www.pathivukal.com 5.மரத்தடி www.maraththadi.com 6.தமிழ் நெட் www.tamizham.net 7.தமிழ்க்கூடல் www.koodal.com 8.நிலாச்சாரல் 9.தமிழ் ஓவியம் 10. தமிழ்க் காவல் 11.தமிழ்த்திணை 12.வானவில் 13.ஆறாம்திணை 14.அம்பலம் 15. அரும்பு.

வலைப்பூக்கள்

     ஆங்கிலத்தில் (Blogger) வலைப்பூ என்று குறிப்பிடுகின்றனர். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்தையும் இதிலும் பதிவேற்றம் செய்யலாம். இணையதளத்தை உருவாக்கி நிர்வகிக்க அதிகப் பொருள்செலவு ஏற்படும். ஆனால் பொருள்செலவின்றி வலைப்பூ உருவாக்கி நிர்வகிக்க முடியும். ஒருவர் தன் சிந்தனைகளை வலைப்பூ வடிவில் இணையதளத்தில் உலவ விடமுடியும். உடனுக்குடன் பின்னூட்டம் அடிப்படையில் மாற்றங்களைச் செய்யமுடியும். யாகூ, எம்.எஸ்.என், ரீடிப் மெயில் என்பவை வழக்கில் உள்ளன. எனினும் கூகிள் நிறுவனத்தின் பிளாக்கர் என்பதே பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. புதிதாக வலைப்பூ உருவாக்க விரும்புபவர்கள் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

1. Creat an account 2.Name your blog 3.Choose your template அவரவர் விருப்பத்திற்கேற்ப மின்னஞ்சல் முகவரியை அமைத்துக் கொள்வது போலவே வலைப்பூ முகவரியும் அமைத்துக் கொள்ளலாம்.

Selvi.blogspot.com –இதில் செல்வி என்பது வலைப்பூ பதிவர். மற்றவை இந்நிறுவனத்தைக் குறிக்கும் பொதுவான அமைப்பு.

தமிழில் வலைப்பூக்கள்

           தமிழ்ப்பூக்கள், மானிடன், மு.இளங்கோவன், துரையரசன், திருமன்றில், மலையறிவு, குறிஞ்சி மலர், வாழ்க தமிழுடன்,உயிர்கொண்டு திளைத்தல், தமிழ்மொழி, தமிழ் அறிஞர்கள், அறிவுமதி, தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம், திரட்டிகள் போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

கல்விசார் இணையதளங்கள்

     இவற்றை 1.கற்பிப்பவை 2.நூலகங்கள் 3.தகவல்கள் வழங்குபவை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். தகவல் தருபவையில் 1. விக்கிப்பீடியா 2. யூ.ஜி.ஸி, 3. மனிதவள மேம்பாட்டுத்துறை 4. தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை 5. தமிழ்வளர்ச்சித்துறை.

வேலைவாய்ப்பு இணையதளங்கள்

1.மத்தியரசு பணியாளர் தேர்வாணையம் 2.இந்திய ஆட்சிப்பணி 3.இணையவேலைவாய்ப்பு மையங்கள் (நாக்ரி.காம்).

மின்னணுப் பாடநூல்

     வகுப்பறைப் பாடநூலுக்கும் மின்னணுப் பாடநூலுக்கும் இடையே மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. ஆசிரியர் உதவியின்றி சுயமாகக் கற்றுக் கொள்ளும் திறன் எவ்வாறெல்லாம் மின்னணுப் பாடநூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழை முதல் மொழி மற்றும் இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்வதற்கு எவ்வாறெல்லாம் இந்த மின்னணுப் பாடநூல்கள் பயன்படுகின்றன என்றும் ஆராய்வது தேவையானதொன்றாகும்.

           இவ்வகையில் தமிழை முதல் மற்றும் இரண்டாம் மொழியாகப் பல்லூடக முறையில் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் அரசும் தனியார் நிறுவனங்களும் பல்லூடகக் குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தமிழ் உலகம்’ ஆலன்பார்க் இன்போடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘செம்மொழி’ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சான்றிதழ் கல்விக்கான அடிப்படை நிலை, மற்றும் இடைநிலைக் கல்வி பல்லூடகக்  குறுந்தட்டுகளை அறிமுகம் செய்து நிறைகுறைகளைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கட்டுரைப் பின்வரும் பகுதிகளைக் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

           1.மின்னணுப் பாடநூல் சுருக்கம்
2.பாடப்பொருள் மதிப்பீடு
3.உரையாடல் பகுதி மதிப்பீடு
4.பயிற்சிப் பகுதி மதிப்பீடு
5.கணினிப் பயன்பாடு மதிப்பீடு.

1.மின்னணுப் பாடநூல் சுருக்கம்

     1.தமிழ் உலகம்

           உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் வழிக் கற்பதற்குத் ‘தமிழ் உலகம்’ என்ற தலைப்பில் இரண்டு குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் சாப்ட் நிறுவனத்தினர் தயார் செய்த பல்லூடக மென்பொருளைப் பின்பற்றிப் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலமொழி வழித் தமிழை முறையாகக் கற்க வேண்டுமென்ற ஆர்வமுடைய வெளிநாட்டவருக்கும், ஓரளவு தமிழ்தெரிந்த பிற மொழியினருக்கும், புலம்பெயர்ந்து தமிழை மறந்த தமிழர்களுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் முறையில் 25 அலகுகளாகப் பிரித்துப் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இலக்கணப்பகுதி, உரையாடல் பகுதி, இலக்கியப் பகுதி, பயிற்சிப்பகுதி என்னும் பல்வேறு கோணங்களில் பாடக் கருத்துக்கள் மிக எளிமையாகப் பல்லூடக முறையில் விளக்கப்பெற்றுள்ளன. குறுந்தட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கணினி நுணுக்கம் தமிழை முதல், இரண்டாம் மொழியாக ஆசிரியர் துணையுடன் மட்டுமே கற்கும் முறையில் அமைந்துள்ளது. ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டுகளின் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டங்கள் படித்தல் திறனை வளர்த்தல், பாடங்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல், மொழி விளையாட்டுக்கள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. இவற்றில் கணினி சரியான விடை தருபவர் என்னும் நிலையிலேயே உள்ளது. பயிற்சி செய்யும்போது மாணவன் தவறு செய்தால் தவற்றைச் சுட்டிக்காட்டும் கணினி நுணுக்கம் சிறிதளவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாடப்பகுதி மற்றும் பயிற்சிப்பகுதியில் அமைந்துள்ள மென்பொருள் மாணவர்களுக்குக் கற்றல் சாதனங்களைக் கொண்டு கொடுக்கும் வாகனமாக மட்டுமே அமைந்துள்ளது.

  1. செம்மொழி

        ஆலன் பார்க் இன்போடெக் நிறுவனம் இப்பல்லூடகக் குறுந்தட்டை வெளியிட்டுள்ளது. தமிழ்மொழியை முதல் மற்றும் இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்ள உதவும் முகமாகப் பாடங்கள் பல்லூடக முறையில் விளக்கப் பெற்றுள்ளன. .அடிப்படை எழுத்துப் பயிற்சி, உச்சரிப்புப் பயிற்சி, எண்கள் ,பாடங்கள், விடுகதைகள், செய்யுள், பாடல்கள், கதைகள் என்னும் எட்டு தலைப்புகளில் பாடக் கருத்துக்கள் விளக்கப் பெற்றுள்ளன. கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், உரையாடுதல், இலக்கணக் கூறுகளை அறிதல் போன்ற மொழித் திறன்களைப் பெறும் வகையில் ஆசிரியர் உதவியின்றி விளையாட்டு, வேடிக்கை என்று கற்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  1. சான்றிதழ்க் கல்வி அடிப்படை நிலை

           தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்தக் குறுந்தட்டில் தமிழ்ச் சான்றிதழ்க் கல்விக்கான அடிப்படை நிலை மற்றும் இடைநிலைப் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துக்களின் ஒலி/வரி வடிவங்களும் எழுநூறுக்கும் மேற்பட்ட சொற்களும் சிறு தொடர்களும் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்திப் படிக்க ஆர்வமூட்டும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

     எழுத்துக்களின் ஒலிப்புப் பயிற்சி, எழுதும் பயிற்சி, எழுத்துக்களைக் கூட்டிப்படிக்கும் பயிற்சி, சொற்களைக் கூட்டிப்படிக்கும் பயிற்சி, பாடல் பயிற்சி போன்ற பயிற்சிகளுடன் பாடங்களை எளிதில் கற்கும் வகையில் பல்லூடக வசதிகளோடு ஆக்கப்பட்டுள்ளன. தொடக்க வகுப்புகளில் பயன்படும் வகையில் 15 தலைப்புகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன.

2.பாடப்பொருள் மதிப்பீடு

1.எளிமையிலிருந்து கடினம்

     ஒரு மொழியில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று இலக்கண உட்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை முறைப்படி கற்கும் முறையில் பாடப்பகுதி அமைய வேண்டும். கற்றல் உத்தியான எளிமையிலிருந்து கடினம் என்னும் முறையிலும் பாட விளக்கம் அமைய வேண்டும். ஆனால் சில இடங்களில் கடினமான பகுதி முதலில் விளக்கப்பட்டுள்ளது. பாட விளக்கமும் முன்பின் முரணாக அமைந்துள்ளது.

       ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டில் வேற்றுமைகளின் விளக்கத்தைச் தொடர்ச்சியாக அடுத்தடுத்த இயல்களில் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் வேற்றுமை விளக்கம் முன்பின் முரணாகப் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. செம்மொழி மற்றும் சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டுகளில் ஓரளவு எளிமையிலிருந்து கடினம் என்னும் நிலையில் பாடப்பொருள் விளக்கம் அமைந்துள்ளது.

  1. இலக்கியத் தமிழும் பேச்சுத்தமிழும்

       ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டில் பேச்சுத்தமிழ்ப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அளவிற்கு, செம்மொழி, சான்றிதழ்க்கல்வி  குறுந்தட்டில் பேச்சுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இலக்கியத் தமிழ் விளக்கப்பட்ட அளவிற்குப் பேச்சுத்தமிழ் விளக்கம் பெறவில்லை. பேச்சுத்தமிழைச் சிறப்பாகக் கையாளுவதற்கு நாட்டுப்புறப் பாடல்கள் வட்டார வழக்குச் சொற்கள் போன்றவற்றைக் கொடுத்திருக்க வேண்டும்,

பொருளடக்கப்பகுதி

      ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டின் முன்னுரையில் பொருளடக்கப் பகுதி கொடுக்கப்படவில்லை. முன்னுரை அல்லது முதல் இயலில் பொருளடக்கப் பகுதி (Index) கொடுத்திருந்தால் குறிப்பிட்ட பாடப்பகுதியை எளிதாகக் கண்டு பிடிப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

     ஒரு மொழியை முழுமையாகக் கற்பதற்கு அம்மொழியிலுள்ள இலக்கியங்களைக் கற்க வேண்டும். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கவிதை போன்றவற்றை இசையுடன் பாடலாகப் பல்லூடகம் வழிச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். தமிழ் உலகம் குறுந்தட்டில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் பகுதியிலிருந்து ஓரிரு பாடல்கள் மட்டுமே இசையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பிற குறுந்தட்டுகளில் குழந்தைப்பாடல்கள் மட்டுமே இசையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பாடத்தோடு தொடர்புடைய பழமொழிகள், பாடல் வரிகள், தற்கால எழுத்தாளர்களின் படைப்புகள், குட்டிக் கதைகள், படங்கள் போன்றவற்றைப் பாடப்பொருள் விளக்கத்தின் இடையிடையே கொடுத்திருக்கலாம்.

  1. 2. உரையாடல் பகுதி மதிப்பீடு

        உலகில் தோன்றிய எல்லா மொழிகளிலும் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்த வேறுபாடு தமிழில் சற்று மிகுந்து காணப்படுகின்றது. கல்வி கற்றவர்களால் மட்டுமே பேச்சு வழக்கினையும் எழுத்து வழக்கினையும் சரளமாகக் கையாள முடியும். பேச்சுத் தமிழைக் கற்க இயற்கையான வழிகளைக் கடைப்பிடிப்பது சிறந்த முறையாகும். இவ்வகையில் பாடங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வீடு, விழாக்கள், சுற்றுலா போன்றவை பற்றியே அமைந்துள்ளன. சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டில் இப்பகுதி இயற்கையாக அமையவில்லை.

     ல, ள, ழ, ன, ண, ந, ற, ர ஆகிய எழுத்துக்களின் உச்சரிப்பைத் தெளிவாக உச்சரிக்கத் தெளிவான பயிற்சி கொடுக்கவில்லை என்றால் உச்சரிப்பில் பிழை ஏற்பட வாய்ப்புண்டு. தமிழ் உலகம், சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டுகளில் இவ்வகை எழுத்துக்களுக்குத் தெளிவான உச்சரிப்பும் பயிற்சியும் கொடுக்கப்படவில்லை. சில சொற்கள் பிழையாக உச்சரிக்கப்பட்டுள்ளன.

(எ.டு)சந்த்திப்பேன்- சந்திப்பேன், சான்னு- சானு

உறுப்புகளின் அசைவுகள்

     உரையாடலில் சில குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்குப் பெரும் பங்களிப்பு உண்டு. வாயின் அசைவுகளை வைத்தே சைகை மொழியில் கருத்துக்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

       உடல்மொழி (Body Language) பேச்சு மொழிக்குத் துணையாக அமையும்  என்று மொழியியல் அறிஞர் கூறுவர். தமிழ் உலகம், செம்மொழி குறுந்தட்டுகளின் உரையாடல் பகுதி விளக்கத்தில் நிழற்படங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. நவீன கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாக உரையாடும் முறையைக் கொடுத்திருந்தால் மொழி கற்பித்தல் இயற்கையாக அமைந்திருக்கும்

3.பயிற்சிப்பகுதி மதிப்பீடு

           பயிற்சிப் பகுதி தன் மதிப்பிடுதல் முறையில் விளக்கப்பட்டுள்ளது. எளிய பயிற்சி அணுகுமுறைகள், துணைக்கருவிகள் உருவாக்கப்பெற்று சொல் விளையாட்டு, வாக்கிய விளையாட்டு என்னும் நிலைகளில் இப்பகுதி அமைந்துள்ளது. பாடங்களில் கற்றவற்றை மாணவர்கள் நினைவில் வைத்துள்ளனரா என்று கண்டறியும் பொருட்டே வினாக்கள் அமைய வேண்டும். ஆனால் வினாக்கள் அனைத்தும் பொதுவானவையாகவே அமைந்துள்ளன. இலக்கியத் தமிழைக் கற்றுக்கொள்ளும் முறையிலேயே பெரும்பான்மையான பயிற்சிகள் அமைந்துள்ளன.

           எழுத்துக்களை ஒன்றுசேர்த்து சொற்களை உருவாக்குவதும், சொற்களை இணைத்து வாக்கியங்களைப் படைப்பதுமாகிய இரண்டு முறைகளே பாடங்களில் பயிற்சியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கற்போருக்கு எழுத்துக்களை இணைக்கும் பயிற்சியும் சொற்களை இணைக்கும் பயிற்சியுமே ஏற்படுகிறது. பொருளை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. எனவே ஆய்வுக்குரிய குறுந்தட்டுகளில் பொருளை அறிந்துகொள்ளும் முறையில் பயிற்சிகள் கொடுத்திருக்கலாம்.

www.chennailibrary.com
www.ezhilnila.com
www.kalachuvadu.com
www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html
www.noolaham.net
www.tamilmanam.net
www.tamil.net/project
www.tamilvu.org
www.ta.wikipedia.org
www.Viruba.com

******

கட்டுரையாளர்
தமிழ்த்துறை
கேரளப்பல்கலைக்கழகம்
காரியவட்டம்
திருவனந்தபுரம் 695 581

                     

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க