ஓலைச்சுவடி
முனைவர் சு.சத்தியா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.
தமிழையும் தமிழனையும்
தரணியெங்கும் ஒளிவீசசெய்த
ஓலைங்க!பனைஓலைங்க!
இலக்கண இலக்கியம்
மருத்துவம் கண்டதிந்த
ஓலைங்க! பனைஓலைங்க!
அக்கால வாழ்வுதனை
எக்காலமும் காட்டுமிந்த
ஓலைங்க! பனைஓலைங்க!
ஓலைச்சுவடி படித்திடுங்க
ஓய்வில்லாமல் உழைத்திடுங்க!
உலகம் நம்மை தேடிவரும் பாருங்க!
இதுதான் நம் தமிழ் தாத்தா கண்டெடுத்த
ஓலைங்க பனைஓலைங்க!….