ht1396

=====================

 

மொத்தநம் அங்கமும் பொய்யுடலில் பொழித்திருப்பின்..

……….ஒத்தயிரண்டு கண்களில்லா உருவத்தை ஏற்கமுடியுமா.?

அத்துணை படைப்புக்குமற்புத உறுப்புண்டாம் அதில்..

……….அழகுமிகும் கண்களுக்கே..! அங்கத்தில் முதலிடமாம்.!

தத்துவமாய்த் தெரிகின்றதோர் ஓவியத்தை உயிரூட்டத்..

……….தகும் சான்றொன்று உண்டென்றாலது கண்ணழகேயாம்.!

வித்தைசெயும் வித்தகன்தன் விளையாட்டை விடுமுன்..

……….விழிகளுக் கங்கேயோர் விழிப்பான வேலையுண்டாம்.!

 

 

 

முத்துக்கோர்த்த பற்களொடு முல்லையிதழ் சிரிப்பொடு..

……….மமதைமிகு கன்னியொருத்தி யெதிர்வந்தால்!.காளையர்..

ரத்தநாளமும் கொதிக்குமவர் கண்களும் யுத்தம்செய்யும்..

……….முத்திநெறி பக்தியெல்லாம் பஞ்சுபோலப் பறந்தோடிடும்.!

அத்தியாயம்போல…காதல்சரிதத் தையங்கே துவக்கும்..

……….அத்திரப் பிரயோகம்போல காதலுணர்வு ஆர்ப்பரிக்கும்.!

யுத்தம்செயும் யுத்தவீரனின் கூர்வாளும் சிவந்தவிழியும்..

……….யுத்தகளம் நோக்காதந்த யுவதியின்கண் சாய்ந்துவிடும்.!

 

 

 

உறங்காமல் கண்விழித்து..கண்ணழகி மனைவியின்கண்..

……….ஒளிகாக்க உச்சிவெயிலில் குடைபிடித்தான் ஒர்மறவன்.!

உறங்காவில்லி தாசனெனும் உத்தமவீரனாம்! ஒப்பிலாத..

……….உறையூர் மன்னன்மெய் காப்பாளனென ஊரரிவான்.!

உறவாடுமுற்ற துணையாமவன் மனைவியின் கண்ணே..

……….உலகுபோற்றும் பேரழகென ஊரெங்கும் உலாவருவான்.!

துறவறம்பூண்ட இராமனுச முனிவனுமிதைப் பார்த்தான்..

……….திறன்வீரனிடம்…இதைவிடப் பேரழகு? உண்டென்றான்.!

 

 

 

யுத்தம்செயும் கண்களில் கனல்நெருப்பைக் காணும்படி..

……….வெறித்தவீரனும் தன்வெறுப்பை முனிமீது யுமிழ்ந்தான்.!

மொத்தயுலகமும் திரண்டு வந்தாலுமென் மனைவியின்..

……….முத்தான அவள்கண்ணே அழகென்றான்!வழக்காடினான்.!

மெத்தனத்தால் மெய்யறியாத மெய்க்காப் பானவனுக்கு..

……….மெதுவாய்ப் புரியவைத்தார்! பெரும்பூதூர் மாமுனிமகான்.!

அத்துணைபேரும் அறிந்த அழகான கண்ணென்றாலது..

……….அத்தன் அரங்கனுடைதென அறியவைத்தார் உலகுக்கே.!

 

=================================================

நன்றி கவிதைமணி வெளியீடு::14-01-18

நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.